இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகமும், வருமானமும் இருப்பதை உணர்ந்த இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் ஆகிய துறையில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்த பின்பு தற்போது ரீடைல் சந்தையில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொட்டி வருகிறார்.
இந்திய ரீடைல் சந்தையில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை, காரணம் இந்திய மக்கள் விலை போட்டியை ஆதரிப்பவர்கள். ஆனால் சமீபத்தில் இதில் சில மாற்றம் ஏற்பட்டாலும் போட்டி என்னவோ பெரு நிறுவனங்கள் மத்தியில் குறைவதாக தெரியவில்லை. இந்த போட்டி மிகுந்த சந்தையில் பணத்தை மட்டும் கொட்டினால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த முகேஷ் அம்பானி இந்திய நுகர்வோர் சந்தையில் இருக்கும் வல்லுனர்களை சேர்க்க துவங்கினார்.

உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்பா கோலா-வை வாங்குவதற்கும், அறிமுகம் செய்வதற்கும் முன்பு முகேஷ் அம்பானி டி கிருஷ்ணகுமார் என்பவரை பணியில் சேர்த்தார். இந்திய குளிர்பான சந்தையில் கோகோ கோலா, பெப்சி நிறுவனத்தை ஓரம்கட்டும் திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள campa அறிமுகத்திற்கு முக்கிய காரணம் கிருஷ்ணகுமார், இவர் கோகோ கோலா நிறுவனத்தில் சுமார் 17 வருடம் பணியாற்றிவிட்டு 2021ல் ரிலையன்ஸ் இண்ட்ஸ்டீரீஸ் நிறுவனத்தின் சேர்ந்தார், இவர் வழிக்காட்டுதலின் படி தான் முகேஷ் அம்பானி CAMPA பிராண்டை வாங்கியது.
இப்படியிருக்கும் நிலையில் சுமார் 40 வருடம் இந்தியாவின் முன்னணி பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமுல்-ன் முன்னாள் நிர்வாக இயக்குனர் ரிலையன்ஸ்-ல் சேர்ந்துள்ளார். இவர் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை பிரிவுக்கு ஆலோசகராக இருப்பார் என கூறப்பட்டாலும், இந்த பிரிவுக்கு கீழ் தான் DAIRY பிரிவும் உள்ளது என்பதை மறந்து விட முடியாது.
ரிலையன்ஸ் நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் பால் துறையில் முதன் முதலில் நுழைந்தது. ரிலையன்ஸ் டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர் ஆகிய இரண்டு பிராண்டுகளின் கீழ் இந்தியா முழுவதும் பால் கொள்முதல், செயலாக்கம் மற்றும் விநியோகம் செய்து வந்தது. டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர் ஆகிய பிராண்ட் கீழ் பேக் செய்யப்பட்ட பால், சுவையூட்டப்பட்ட பால், வெண்ணெய், நெய், தயிர், மில்க் ஒயிட்னர், இனிப்புகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் போன்ற பல தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.

சுமார் 10 வருடம் டெய்ரி லைஃப் மற்றும் டெய்ரி ப்யூர் பிராண்டுகளை இயக்கிய ரிலையன்ஸ் பின்பு Heritage Foods நிறுவனத்திற்கு தனது வர்த்தகம், கட்டமைப்புகளை மொத்தமாக விற்பனை செய்தது. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2021 முதல் FMCG வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தையும், முதலீட்டையும் செய்து வருகிறது. இதற்கிடையில் ஆர்.எஸ் சோதி நிறுவனத்தில் சேர்ந்துள்ளது ரிலையன்ஸ் மீண்டும் பால் துறையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்ற கேள்வி முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவில் டெய்ரி துறை ஒவ்வொரு வருடமும் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது, இதனால் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்திக்கும், வர்த்தகத்திற்கும் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டில் பால் உற்பத்தி குறைந்த நிலையில், பால் பொருட்களான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் வெண்ணெய் மற்றும் நெய் போன்ற முக்கியமானவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தயாராகி வருகிறது. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications