இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை அளிக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த New Umbrella Entity (NUE) திட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்பிமீம், கூகிள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து குளோபல் பேமெண்ட் சேவையை அளிக்க முடியு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது ரிலையன்ஸ், டாடா, அமேசான், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் தலைமையிலான 4 கூட்டணிகள் New Umbrella Entity பிரிவை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவை தரம் மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் NUE திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 5 வருடத்தில் பல துறைகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் New Umbrella Entity வாயிலாகக் கூகிள், பேஸ்புக் உடன் இணைந்து ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் வாயிலாக விசா மற்றும் மாஸ்டர்கார்டு-க்கு இணையாகச் சர்வதேச பேமெண்ட் சேவைகளை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.
குளோபல் பேமெண்ட் சேவை
முகேஷ் அம்பானியின் இந்தக் கனவு பேமெண்ட் சேவை நடைமுறைக்கு வந்தால், உலகில் எந்த நாடுகளுக்கும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். குளேபல் பேமெண்ட் சேவையில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இப்போட்டியைச் சமாளிக்கவே முகேஷ் அம்பானி கூகிள் மற்றும் பேஸ்புக் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
போட்டி அதிகம்
ரிலையன்ஸ், டாடா, அமேசான், பேடிஎம் ஆகிய 4 நிறுவனங்களின் தலைமையிலான கூட்டணியின் விண்ணப்பம் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நிச்சயம் NUE உரிமம் பெறும் என நம்புகிறது. இதனை அடிப்படையாக வைத்து ரிலையன்ஸ் குளோபல் பேமெண்ட் துறையில் நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
நிறுவன பங்கீடு
New Umbrella Entity-க்காகப் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் 40 சதவீதமும், இன்பிபீம் அவென்யூ, பேஸ்புக், கூகிள் ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத பங்குகளைக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் குளோபல் பேமெண்ட் சேவையை உருவாக்குவதில் ரிலையன்ஸ் கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தைத் தான் அதிகளவில் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம்
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 200 பில்லியன் டாலர் வரையில் உயரும் என மத்திய எலக்ட்ரானிக்ஸ் மறறும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் பிப்ரவரி 27ல் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2018 இந்திய பொருளாதாரத்தின் படி இது கிட்டதட்ட 8 சதவீத ஜிடிபி ஆகும்.


Click it and Unblock the Notifications