ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் லாபத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாபத்தில் 7 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகளை இரவு நேரத்தில் வெளியிட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் இதன் தாக்கம் தெரியவில்லை. ஆனால் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளின் தாக்கம் கட்டாயம் எதிரொலிக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் லாப அளவீடு சரிய என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் காரணத்தைப் புரிந்துகொள்வார்களா..?!

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கடந்த நிதியாண்டில் ஜூன் காலாண்டில் 13,233 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றது, ஆனால் ஜூன் 2021 காலாண்டில் இதன் அளவு 7.25 சதவீதம் குறைந்து 12,273 கோடி ரூபாயாகக் குறைந்தது.

 ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ

இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இரட்டிப்பு லாப வளர்ச்சியும், ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் இவ்விரு பிரிவுகளின் லாபம் அளவீடு 45 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 செலவுகள் 50% அதிகரிப்பு

செலவுகள் 50% அதிகரிப்பு

ஆனால் இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த செலவுகள் 50 சதவீதம் அதிகரித்து 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் லாப அளவீடுகள் குறைந்துள்ளது எனத் தனது காலாண்டு முடிவுகளில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

 வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

இந்த ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருவாய் 91,238 கோடி ரூபாயில் இருந்து 58 சதவீதம் அதிகரித்து 1.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இக்குழுமத்தின் EBITDA அளவு 27.6 சதவீதம் அதிகரித்து 27,550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஜூன் காலாண்டு லாப அளவீடுகள் இரண்டு மடங்கு அதிகரித்து 962 கோடி ரூபாயாக உள்ளது. இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக 123 கடைகளைத் திறந்துள்ளது. இதன் மூலம் மொத்த கடைகளின் எண்ணிக்கை 12,803 கடைகளாக உயர்ந்துள்ளது.

 ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ ஜூன் காலாண்டில் 45 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்து 3,651 கோடி ரூபாயை பெற்றுள்ளது, இக்காலகட்டத்தில் வருவாய் அளவீடு 18,952 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ஜியோ நிறுவனத்தின் ARPU அளவீடு 138.2 ரூபாயில் இருந்து 138.4 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+