முகேஷ் அம்பானி அறிவித்த புதிய ஆஃபர்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 300நிமிட டாக்டைம் இலவசம்!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்து இருந்தாலும், தொடர்ந்து வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் இழந்த வரும் காரணத்தால் பல்வேறு தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா தொற்று ஜியோவின் வர்த்தகத்தையும், வருமானத்தையும் பாதித்துள்ளது.

இந்த வேளையில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், அதே நேரத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் வகையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்புகள் ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தனது ஜியோபோன் வாடிக்கையாளர்கள் கொரோனா தொற்றுக் காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாத பட்சத்தில் ஒரு மாதத்திற்கு இலவசமாக 300 நிமிடங்கள் டாக்டைம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

300 நிமிடங்கள் டாக்டைம் இலவசம்

300 நிமிடங்கள் டாக்டைம் இலவசம்

அதாவது கொரோனா தொற்றுக் காலத்தில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாத பட்சத்திலும் அவர்களுக்குத் தினமும் 10 நிமிடம் டாக்டைம் அடிப்படையில் மாதம் 300 நிமிடங்கள் என மொத்த தொற்று காலத்திற்கும் இந்த இலவசங்களை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்.

ரீசார்ஜ் திட்டம் இலவசம்

ரீசார்ஜ் திட்டம் இலவசம்

இதேபோல் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும், மற்றொரு ரீசார்ஜ் திட்டம் இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இதேவேளையில் வருடாந்திர மற்றும் பன்டில் திட்டங்களுக்கு இத பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலம்

கொரோனா தொற்றுக் காலம்

இதன் மூலம் ஜியோபோன் வைத்திருப்போர் 100 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மற்றொரு 100 ரூபாய் திட்டம் இலவசமாக வழங்கப்படும். மக்களின் இந்திய இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவது மற்றும் அவர்களுடன் துணை நிற்பது எங்களுடைய கடமை எனத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

இதே ஆஃபரை ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்பது ஜியோ வாடிக்கையாளர்களின் கவலையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+