இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் செல்லப்பிராணி பராமரிப்புச் சந்தையில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதை பெரிய வாய்ப்பாக பார்த்த அம்பானி குடும்பம், தனது நுகர்வோர் வர்த்தக பிரிவின் மூலம் இத்துறையில் இறங்கியுள்ளது. இந்தியாவில் செல்லப்பிராணி பராமரிப்பு பிரிவில் உணவு முதல் Grooming வரையில் மிகப்பெரிய சந்தையாக மாறி வருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எஃப்எம்சிஜி பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் இத்துறையில் புதிய பிராண்ட் உடன் அதிகாரப்பூர்வமாக நுழைவைதாக அறிவித்துள்ளது.

'வாக்கீஸ்' (Waggies) என்ற புதிய செல்லப்பிராணி உணவுப் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ், உலகத் தரம் வாய்ந்த செல்லப்பிராணிகளுக்கான உணவு பொருட்களை மலிவு விலையில் வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு முழுமையான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்தை வழங்குவதே வாக்கீஸ் பிராண்டின் முக்கிய இலக்கு என்று ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் இருக்கும் பிராண்டுகள் அதிகப்படியான விலையில் இந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் காரணத்தால் பல குடும்பங்கள் செல்லப்பிராணிகளுக்கு தரமான உணவை கொடுக்க முடியாமல் போகும் நிலையை மாற்ற விரும்புவதாகவும், அதே சமயம் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப் போவதில்லை என்றும் ரிலையன்ஸ் உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தப் புதிய வர்த்தக நுழைவு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சந்தையில் செல்லப்பிராணிகளுக்கான உணவு பொருட்களை விற்பனை செய்வதில் ஆதிக்கம் செலுத்தும் நெஸ்லே, மார்ஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், எமாமி போன்ற பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை விட வாக்கீஸ் தனது தயாரிப்புகளின் விலையை 20 முதல் 50 சதவீதம் வரை குறைவான விலையில் விற்கப்போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இதன் மூலம் உயர்தர செல்லப்பிராணி உணவு பொருட்கள் பெரு நகரங்களை தாண்டி டவுன் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கும் எட்டக்கூடியதாக மாறும் என இந்நிறுவனம் நம்புகிறது.

ரிலையன்ஸ் தனது தயாரிப்புகளை சந்தையில் விற்கப்படும் பொருட்களை காட்டிலும் மிக குறைவாக விற்பனை செய்து சந்தையில் வெற்றிக்கண்ட அனுபவம் உள்ளது. முகேஷ் அம்பானி கேம்பா கோலா மூலம் போட்டி மிகுந்த பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில் குறைவான விலை கொண்டு இந்திய குளிர்பான சந்தையில் பெரும் வெற்றிபெற்ற அதே உத்தியை இப்போது செல்லப்பிராணி உணவுத் துறையிலும் ரிலையன்ஸ் கையாள்கிறது.
தற்போது இந்தியாவில் செல்லப்பிராணி பராமரிப்புத் துறை ஆண்டுக்கு 15-20 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் செல்லப்பிராணிகளை வளர்க்கும் போக்கு வேகமாகப் பரவி வருகிறது. இது மட்டும் அல்லாமல் செல்லப்பிராணிகளுக்காக செலவு செய்யும் அளவும் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் உலகத் தரத்தில் மலிவு விலை செல்லப்பிராணி உணவை வழங்கும் முடிவு முகேஷ் அம்பானியின் ரிலையின்ஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்-க்கு ஜாக்பாட் ஆக மாறலாம். ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸின் இந்தப் புதிய அத்தியாயம் இந்திய எஃப்எம்சிஜி சந்தையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications