முகேஷ் அம்பானி நிறுவனத்தின் புதிய கோவிட்19 வேக்சின்.. சோதனைக்கு ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய கோவிட் வேக்சின்-ஐ பரிசோதனை செய்ய அனுமதி பெற விண்ணப்பம் சமர்ப்பித்திருந்த நிலையில், மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவில் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பயோ பார்மா துறையில் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தையும், உற்பத்தி தளத்தையும் தனது கிளை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ளது. இந்த நிறுவனம் இந்திய பார்மா துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போடாத காரணத்தால் பெரிய அளவில் வெளியில் தெரியாமல் இருந்தது.

ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனம்

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனம் புதிதாக ரீகாம்பினென்ட் ப்ரோட்டீன் அடிப்படையிலான கோவிட் 19 வேக்சினை தயாரித்துள்ளது. இந்த வேக்சினை சோதனை செய்ய முறையாக ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம் என்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்து இருந்தது.

ரிலையன்ஸ் கோவிட் 19 வேக்சின்

ரிலையன்ஸ் கோவிட் 19 வேக்சின்

ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனத்தின் விண்ணப்பத்தையும், ரீகாம்பினென்ட் ப்ரோட்டீன் அடிப்படையிலான கோவிட் 19 வேக்சினை மருந்தையும் துறை சார்ந்த நிபுணர் குழு ஆய்வு செய்து முதற்கட்ட சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வேக்சினும் 2 டோஸ் கொண்ட வேக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட சோதனைக்கு ஒப்புதல்

முதற்கட்ட சோதனைக்கு ஒப்புதல்

ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ரீகாம்பினென்ட் ப்ரோட்டீன் அடிப்படையிலான கோவிட் 19 வேக்சின் முதல் கட்ட சோதனையிலே இந்த மருந்தின் பாதுகாப்புத் தன்மை, தாங்கும் திறன், பார்மாகோ-கைனெட்டிக்ஸ், மருத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் பின்பு 2வது மற்றும் 3வது கட்ட சோதனைகளுக்கு அனுமதிக்கப்படும்.

58 நாட்கள் சோதனை

58 நாட்கள் சோதனை

முதற்கட்ட கோவிட் வேக்சின் சோதனை பொதுவாக 58 நாட்கள் நடக்கும் அதன் முடிவுகள் சிறப்பானதாக இருந்தாலும் அல்லது அடிப்படை அளவீடுகளை எட்டினால் மட்டுமே 2வது மற்றும் 3வது கட்ட சோதனைகளுக்கு அனுமதிக்கப்படும் பார்மா துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மருத்து கட்டுப்பாட்டு ஆணையத்துடன் இணைந்து சுமார் 6 கோவிட் வேக்சின்-க்கு அவசர காலப் பயன்பாடு அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த வாரம் தான் சைடஸ் கிளாடியா வேக்சினுக்கு ஒப்புதல் பெற்று 6வது வேக்சினாக உருவெடுத்தது.

6 வேக்சின்-க்கு ஒப்புதல்

6 வேக்சின்-க்கு ஒப்புதல்

இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்புட்நிக் வி, அமெரிக்க நிறுவனங்களான மார்டெனா மற்றும் ஜான்சன் & ஜான்சன் மற்றும் சைடஸ் கிளாடியா என 6 வேக்சின் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள்

இந்தியாவில் வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கவும், மக்களுக்கு வேகமாகக் கொண்டு சென்று அளிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டாலும் போதுமான வேக்சின் இல்லை. இந்த நிலையில் அடுத்தடுத்து வேக்சின் அறிமுகம் செய்யப்படுவது இந்தியாவிற்கு நல்லது.

பயோலாஜிக்கல் E வேக்சின்

பயோலாஜிக்கல் E வேக்சின்

மேலும் ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது ரீகாம்பினென்ட் ப்ரோட்டீன் அடிப்படையிலான கோவிட் 19 வேக்சின் பயோலாஜிக்கல் E தயாரித்தது போன்ற வேக்சின் என்பது கூடுதல் தகவல். அதேபோல் இந்த வேக்சின் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் லைப் சியின்ஸ் நிறுவனங்கள் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+