உலக நாடுகள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காத விதமாக விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அரசு உக்ரைன் மீது போர் தொடுத்து பெரும் பொருளாதார, வர்த்தகப் பின்னடைவுக்கு வழிவகுத்தது.
இந்தப் போர் காரணமாக முதலில் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் தான். ஆனால் இதே கச்சா எண்ணெய்யில் தான் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகி அதிக லாபம் பார்த்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவானது. இதனால் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி, எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அதிகப்படியான சந்தை விலையில் விற்பனை செய்ததன் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளார்.
பொருளாதாரத் தடை
ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உட்படப் பல நாடுகள் தடை விதித்த நிலையில், ரஷ்யா அதிகப்படியான தள்ளுபடியில் கச்சா எண்ணெய்-ஐ விற்பனை செய்யத் துவங்கியது. இதேவேளையில் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் டீசல் மற்றும் பிற எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தள்ளுபடி விலையில் அதிகப்படியான கச்சா எண்ணெய்-ஐ வாங்கி டீசல் மற்றும் நேப்தா ஆகியவற்றை அதிகப்படியான சந்தை விலைக்கு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது.
மெயின்டனன்ஸ் பணிகள்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிப்ரவரி, மார்ச் மாதம் தனது சுத்திகரிப்பு ஆலையில் முக்கியமான பகுதியை மெயின்டனன்ஸ் பணிகள் செய்யத் திட்டமிட்டு இருந்தது, ஆனால் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும் காரணத்தால் மெயின்டனன்ஸ் பணிகளை ஒத்திவைத்தது. இதனால் மூலம் மார்ச் காலாண்டில் இப்பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற்றது.
14 லட்சம் பேரல்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு நாளுக்கு 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் செய்ய முடியும், இதனால் இந்தச் சப்ளை டிமாண்ட் பிரச்சனையைப் பயன்படுத்திக் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
வருவாய் அளவீடுகள்
மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் எண்ணெய் மற்றும் கெமிக்கல் வணிகப் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.1.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் எண்ணெய் எரிவாயு வணிகம் ரூ.848 கோடியில் இருந்து ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications