இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனத்தில் ஒன்று ஜீனோம் டெஸ்டிங் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றித் தனது ரிலையன்ஸ் குடைக்குள் சேர்த்துள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் விரிவாக்கம்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் துவங்கி ரீடைல், ஹெல்த்கேர், டிஜிட்டல், மருத்துவம் எனப் பல துறையில் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி ஹெல்த்கேர் பிரிவில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் நிறுவனம்
இந்நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல் திட்டங்களின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிஸ்னஸ் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக ஜீனோம் டெஸ்டிங் நிறுவனமான ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றியுள்ளது எனப் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
393 கோடி ரூபாய் டீல்
ரிலையன்ஸ் குழுமம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிஸ்னஸ் வென்சர்ஸ் லிமிடெட் மூலம் ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் 2.28 கோடி பங்குகளை 10 ருபாய் மதிப்பீட்டில் சுமார் 393 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
80.3 சதவீத பங்குகள் கைப்பற்றல்
இந்தக் கைப்பற்றல் மூலம் சுமார் 80.3 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ள நிலையில், பங்கு கைப்பற்றலுக்குப் பின்பு, ரிலையன்ஸ் நிர்வாகம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகச் சுமார் 160 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஜீனோம் டெஸ்டிங் பிரிவு
2000, அக்டோபர் 6ஆம் தேதி முதல் இயங்கி வரும் ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் இந்தியாவில் ஜீனோம் டெஸ்டிங் பிரிவில் முன்னோடியாக உள்ளது. இந்நிறுவனத்திடம் பயோஇன்பார்மேட்டிக்ஸ் மென்பொருள் மற்றும் மருத்துவமனை முதல் பார்மா நிறுவனங்கள் வரையில் அனைத்து மருத்துவப் பிரிவினருக்குமான கிளினிக்கல் ரிசர்ச் சேவைகளை அளித்து வருகிறது.
ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் வருவாய் மற்றும் லாபம்
2021ஆம் நிதியாண்டு முடிவில் ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் நிறுவனம் 88.70 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று 8.48 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 25.04 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெல்த்கேர் ஈகோசிஸ்டம்
இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த் ஹெல்த்கேர் ஈகோசிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மேம்பட்ட ஹெல்த்கேர் சேவை அளிக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிரிவின் ஹெல்த்கேர் பிரிவு இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹெல்த்கேர் கனவை நினைவாக்க ஸ்ட்ரான்ட் லைப் சயின்ஸ் நிறுவன கைப்பற்றல் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் வேக்சின்
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் கொரோனா தொற்றுக்கான வேக்சின்-ஐ கண்டுபிடித்துள்ளது. இந்த வேக்சினை சோதனை செய்யக் கோரிக்கை விடுத்த நிலையில் இந்தியாவின் மருத்து கட்டுப்பாட்டு அமைப்பின் SME முதற்கட்ட சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications