முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் Reliance Strategic Business Ventures Limited நிறுவனம் நவ்ஃப்லோட்ஸ் என்னும் நிறுவனத்தில் சுமார் 142 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து சுமார் 85 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து பல புதிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது நாம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மென்பொருள் துறை சார்ந்த வர்த்தகத்திலும் நிறுவனத்திலும் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டி வருகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் மிகப்பெரிய திட்டத்தை ரிலையன்ஸ் கையில் எடுத்துள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
NowFloats
SaaS தளத்தில் இயங்கி வரும் NowFloats ஹைதராபாத் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் தான் தற்போது Reliance Strategic Business Ventures Limited நிறுவனம் 85 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் வருகிற டிசம்பர் 2020ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தில் புதிதாக 75 கோடி ரூபாய் நிதியை வர்த்தக விரிவாக்கத்திற்காக முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ள ரிலையன்ஸ். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு அளவு 89.66 சதவீதமாக உயரும்.
பல முதலீட்டாளர்கள்
NowFloats நிறுவனத்தில் ப்ளூம் வென்சர்ஸ், அயன் பில்லர்ஸ், ஐஐஎப்எல், ஓமிடியார் நெர்வொர்க் எனப் பல நிறுவனங்கள் இணைந்து 2017இல் நடந்த இந்நிறுவனத்தின் சீரியஸ் பி முதலீட்டு சுற்றி சுமார் 10 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றது.
மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் நடப்பு நிதியாண்டில் 73 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் நஷ்டத்தின் அளவு 43.24 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் சேவைகள்
7 வருடமாக B2B துறையில் இருக்கும் இந்நிறுவனம் Dictate, WildFire, மற்றும் YourApp ஆகிய பிராடெக்ட் மூலம் பல துறை நிறுவனங்களுக்குச் சேவை அளித்து வருகிறது. குறிப்பாக மருத்துவர்கள், மருத்துவமனைகள், உற்பத்தி நிறுவனங்கள், ஹோட்டல், மற்றும் சலூன், ஸ்பா ஆகியவற்றுக்குச் சேவை அளித்து வருகிறது.
6வது நிறுவனம்
2019ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 6 நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளது. பேஷன் ஈகாமர்ஸ் நிறுவனமான FYND, AI சேட்பாட் நிறுவனமான Haptik, இதைத் தொடர்ந்து Reveries, EasyGov மற்றும் Sankhya Sutra Lab ஆகிய நிறுவனங்களை வாங்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications