இந்தியாவின் 2வது பணக்காரர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளராக இருக்கும் முகேஷ் அம்பானி-க்கு மத்திய அரசு உயர் தர பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கௌதம் அதானிக்கு மத்திய புலனாய்வு அமைப்பினர் கொடுத்து விபரங்கள் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானிக்குக் கூடுதலான பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Z+ பாதுகாப்பில் என்ன ஸ்பெஷல்..? இதேபோல் நீதா அம்பானி, கௌதம் அதானி ஆகியோருக்கு எந்த வகை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி
மத்திய அரசு சார்ப்பில் ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு Z பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பின் கொடுத்த ஆபத்துக் காரணிகள் அடிப்படையில் இந்தப் பாதுகாப்பை Z plus ஆக உயர்த்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Z+ பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்புத் தரத்தை உயர்த்தியதன் மூலம் கூடுதல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக் காரணிகள் கருத்தில் கொள்ளப்படும், மேலும் இந்தப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான சம்பளத்தை முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து மத்திய அரசுக்குச் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதா அம்பானி
முகேஷ் அம்பானிக்கு 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக Z பாதுகாப்பு அளிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் முகேஷ் அம்பானி-யின் பணத்தில் மட்டுமே அளிக்கப்படுகிறது.
கௌதம் அதானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி-க்கு சமீபத்தில் CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CRPF அமைப்பு
இந்த Z பாதுகாப்பை பொதுவாக CRPF அமைப்பு தான் வழங்கும், தற்போது CRPF அமைப்பில் இந்தியாவில் சுமார் 119 பேருக்கு உயர் தர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 18 பேருக்கு Z plus பாதுகாப்பு, 27 பேருக்கு Z பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்பின் முடிவுகள் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
கமாண்டோ
தற்போது முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்படும் Z Plus பாதுகாப்பில் 40 - 50 கமாண்டோ அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள்
இதேபோல் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கப்படும். இதேபோல் முகேஷ் அம்பானி பயணத்தின் போது ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவருடைய வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications