ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண மங்கள மேள தாளங்கள் ஒலிக்கும் பின்னணியில் முகேஷ் அம்பானியின் சம்பந்திகள் பற்றி இங்கு பார்க்கலாம். இந்தியாவின் செல்வாக்கு மிக்க மூன்று குடும்பங்களுடன் முகேஷ் அம்பானி சம்பந்தம் வைத்துள்ளார்.
அஜய் பிரமல்- பிரமல் குரூப்பின் தலைவர் அஜய் பிரமல் முகேஷ் அம்பானியின் சம்பந்திகளில் மிகவும் பணக்காரர் ஆவார். அஜய் பிரமலின் தொழில் சாம்ராஜ்யம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்மாசூடிகல், பைனான்ஸ், ஹெல்த் கேர் துறைகளில் விரிந்து பரவியுள்ளது.

அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமல் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் மகளான ஈஷா அம்பானியை மணந்துள்ளார். அஜய் பிரமலின் நிகர சொத்து மதிப்பு ரூ.23,170 கோடி என போர்ப்ஸ் கணக்கிட்டுள்ளது.
அருண் ரஸ்ஸல் மேத்தா- ரோஸி புளூ என்ற புகழ்பெற்ற வைர நகை பிராண்டின் நிர்வாக இயக்குநராக அருண் ரஸ்ஸல் மேத்தா உள்ளார். 12 நாடுகளில் ரோஸி புளூ டயமண்ட் நிறுவனம் பிரபலமாக உள்ளது. அருண் ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவில் 26 இடங்களில் கிளை விரித்துள்ளது ரோஸி புளூ. அருண் ரஸ்ஸல் மேத்தாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.3000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
விரேன் மெர்ச்சன்ட்- என்கோர் ஹெல்த்கேர் பார்மாசூடிகல் லிமிடெட்டின் சிஇஓவாக விரேன் மெர்ச்சன்ட் உள்ளார். அவரது மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானியை மணமுடிக்கிறார். விரேன் மெர்ச்சன்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.755 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
விரேன் மெர்ச்சன்டின் மூத்த மகள் அஞ்சலி மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த் பார்மாசூடிகல் லிமிடெட் நிறுவனத்தின் டைரக்டராக உள்ளார். அத்துடன் சொந்தமாக இரு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.2000 கோடிக்கு மேல் எனத் தெரிகிறது.
முகேஷ் அம்பானி இல்லத் திருமணங்கள் உறவுகளையும் இதயங்களையும் இணைப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் சக்தி வாய்ந்த செல்வாக்கான குடும்பங்களின் சங்கமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் கார்ப்ரேட் உலகில் சமூக வலையில் இந்தக் குடும்பங்களின் பிணைப்பு இணைபிரியாததாக விளங்குகிறது. நாட்டின் தொழில் பரப்பில் அகற்றமுடியாத ஆதிக்க சக்தியாக ஆக்கிரமித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் அதிகாரம் படைத்த குடும்பங்களில் ஒன்றாக இவை விளங்குகின்றன.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications