அமேசான், அலிபாபாவை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி.. எப்படி தெரியுமா..!

மும்பை: உலகளவில் பில்லியனர்களில் ஒருவரான இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, ஆசிய அளவிலும் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான இவர் 2019-ம் ஆண்டில் மட்டும் (டிசம்பர் 23 வரை) மொத்தம் 17 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளாராம்.

இந்த விகிதத்தின் மூலம் முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 61 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி தான் டாப்

முகேஷ் அம்பானி தான் டாப்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து ஆசியாவிலேயே அதிக சொத்து சேர்த்த பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா, 2019ஆம் ஆண்டில் 11.3 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளாராம். அதேநேரம், உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேசானில் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டில் 13.2 பில்லியன் டாலரை இழந்துள்ளார்.

ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளிய பில்கேட்ஸ்

ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளிய பில்கேட்ஸ்

அமேசானின் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டில் 13.2 பில்லியன் டாலரை இழந்துள்ளார். ஜெஃப் பெசோஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ள பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 13.2 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இதே அலிபாபா குழுமத்தின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் வளர்ச்சி கண்டுள்ளது.

பங்குகள் 40% ஏற்றம்

பங்குகள் 40% ஏற்றம்

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டில் 40 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்ததால், அம்பானி பெரிய ஏற்றத்தை கண்டுள்ளார். முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகங்களை விட நுகர்வோர் சலுகைகளை நோக்கி அதிக கவனம் செலுத்துகிறது.

செலவழிப்பு

செலவழிப்பு

முகேஷ் அம்பானி கிட்டதட்ட 50 பில்லியன் டாலர்களை பெரும்பாலும் கடனை செலுத்த செலவழித்துள்ளார். அதிலும் குறிப்பாக வயர்லெஸ் கேரியருக்கு அதிகளவு செலவளித்துள்ளாராம். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்தால், இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் தனி ஒரு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிக முதலீட்டையும் அதிக வருவாயையும் ஈர்த்துள்ளார் அம்பானி.

அதிகளவில் முதலீடு

அதிகளவில் முதலீடு

ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் 50 பில்லியன் டாலருக்கு மேல் அம்பானி முதலீடு செய்துள்ளார். அம்பானி செய்துள்ள முதலீட்டில் பெரும்பாலானவை கடனாகப் பெற்றவையாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்கள் முழுவதையும் 2021ஆம் ஆண்டுக்குள் முடித்து விடுவதாக அம்பானி தெரிவித்துள்ளார். அதற்காக பங்கு விற்பனை ஒப்பந்தங்களிலும் அம்பானி ஈடுபட்டிருக்கிறார்.

அபார சாதனை

அபார சாதனை

ஆசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பணக்காரர்களுக்கான பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளார் முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டில் 14-ம் இடத்திலிருந்து இந்த ஆண்டில் 12 ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதிலும் முகேஷ் அம்பானியின் புதிய வணிகங்கள் சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் வருவாயில் 50 சதவிகித பங்களிப்பை வழங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. அதிலும் தற்போது சுமார் 32% ஆக உள்ளது என்று அம்பானி ஆகஸ்டில் கூறியிருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+