வந்தாச்சு அனந்த் அம்பானி.. முகேஷ் அம்பானி எடுத்த சூப்பர் முடிவு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் சில நாட்களுக்கு முன்பு நடந்த தனது வருடாந்திர கூட்டத்தில் கிளீன் எனர்ஜி பிரிவில் புதிதாக வர்த்தகத்தைத் துவங்குவதாக அறிவித்தது. இத்திட்டத்திற்காகக் குஜராத் ஜாம்நகர் பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளது.

சுமார் 75,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த ரிலையன்ஸ் எனர்ஜி வர்த்தகத்திற்குக் கீழ் புதிதாக ஒரு நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் உருவாக்கியுள்ளது.

 அனந்த் அம்பானி தலைமை

அனந்த் அம்பானி தலைமை

கிளீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவில் துவங்கப்பட்டு உள்ள இரு புதிய நிறுவனங்களான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார், ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகிய நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியை நிர்வாகத் தலைவராக (Director) நியமிக்கப்பட்டு உள்ளார். இது ரிலையன்ஸ் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றமாகவும், முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வரும் நிலையில், பல வர்த்தக மாற்றங்களை எதிர்கொண்ட வேளையிலும், ஒரு குடும்பம் வர்த்தகமாகவே உள்ளது.

2020ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது.

நிர்வாக மாற்றம்

நிர்வாக மாற்றம்

இந்த முதலீட்டுக்கு பின்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பொதுவாக நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் போது நிர்வாக மாற்றம் நடைபெறும். இதற்குச் சமீபத்திய உதாரணம் பிளிப்கார்ட்.

முகேஷ் அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி குடும்பம்

கிளீன் எனர்ஜி வர்த்தகத்திற்கு நிர்வாகத் தலைவராக அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தின் ஆதிக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் அதிகரிக்க உள்ளது. மொத்த ரிலையன்ஸ் குழுமத்தின் கவனமும் தற்போது எண்ணெய் வர்த்தகத்திற்குப் பக்கம் திரும்பியுள்ள நிலையில் அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டு உள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.

ரிலையன்ஸ் O2C

ரிலையன்ஸ் O2C

ரிலையன்ஸ் O2C வர்த்தகத்தில் சுவுதி ஆரம்கோ 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து இப்பிரிவு வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டும் செல்லும் திட்டமும், புதிதாக 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் தயாராகும் கிளீன் எனர்ஜி வர்த்தகமும் இதன் கீழ் தான் செயல்படும்.

அடுத்த தலைவர் யார்

அடுத்த தலைவர் யார்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து இதுவரை முகேஷ் அம்பானி வெளியிடாத நிலையில், இக்குழுமத்தின் மிக முக்கியமான வர்த்தகத்தின் தலைவராக அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

7 புதிய நிறுவனங்கள்

7 புதிய நிறுவனங்கள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் மாதத்திலிருந்து புதிதாக 7 நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

Reliance New Energy Solar
Reliance New Solar Energy
Reliance New Energy Storage
Reliance Solar Projects
Reliance Storage
Reliance New Energy Carbon Fibre
Reliance New Energy Hydrogen Electrolysis

இந்த 7 நிறுவனத்திற்கும் தலா 3 தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அனைத்து நிறுவனங்களிலும் தலைவராக இருப்பது ஷங்கர் நட்ராஜன்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+