இந்திய பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து 13 மடங்கு அதிகரித்து, 40 ட்ரில்லியன் டாலராக 2047ல் அதிகரிக்கலாம் என முகேஷ் அம்பானி மதிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தூய்மையான எரிசக்தி புரட்சி மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் இது முதன்மையாக இயக்கப்படும் என்று கூறினார்.
முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து தனது மதிப்பீட்டினை செய்துள்ளார்.
கெளதம் அதானியின் கணிப்பு
தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை அடுத்து, உலகின் ஐந்தாவது பொருளாதாரமாக உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானியை விட அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்தியாவின் நுகர்வு மற்றும் சமூக பொருளாதார சீர்திருத்தங்களின் பின்னணியில் கடந்த 2050ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக மாறும் என்று கூறினார்.
டாப் 3 இலக்கு
3 ட்ரில்லியன் டாலரில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம், 2047ல் 40 ட்ரில்லியன் டாலரை எட்டலாம். இது உலகின் டாப் 3 நாடுகளில் ஒன்றாக மேம்படலாம் என அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் 2047ல் இந்தியா தனது 100வது சுதந்திர தின விழாவினை கொண்டாடவுள்ளது.
மூன்று புரட்சிகள்
அடுத்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் வளர்ச்சியினை, சுத்தமான ஆற்றல் புரட்சி, -பயோ புரட்சி மற்றும் டிஜிட்டல் புரட்சி என மூன்றும் தான் இந்தியாவினை நிர்வகிக்கும் என அம்பானி கூறியுள்ளார்.
அம்பானியின் ஆயில் முதல் டெலிகாம் வரையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ, தொலைத் தொடர்பு துறையில் அனைத்து போட்டியாளர்களையும் வீழ்த்தி, தொலைத் தொடர்பு துறையில் ஜாம்பவான் ஆக உள்ளது.
என்ன பயன்?
குறிப்பாக இலவசா கால்கள், டேட்டாவில் சலுகை என ட்ஜிட்டல் புரட்சியினை ஏற்படுத்தியது. இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.
சுத்தமான ஆற்றல் புரட்சி மற்றும் பயோ புரட்சி ஆகியவை புரட்சியை மேம்படுத்தால், நிலையான உற்பத்தியினை மேம்படுத்தும். அதே வேளை டிஜிட்டல் புரட்சியானது ஆற்றலை மேம்படுத்த உதவும் என அம்பானி கூறினார்.
More From GoodReturns

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications