ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் நிறுவனம் துவங்கி சில காலாண்டுகளே ஆன நிலையில், அதன் முதல் முழு செயல்பாட்டு ஆண்டான 2023-24 நிதி ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 3,000 கோடி ரூபாய் விற்பனையைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதில், முகேஷ் அம்பானி பெப்சி, கோகோ கோலா உடன் போட்டிப்போட பெரும் திட்டத்துடன் வாங்கப்பட்ட கேம்ப கோலா குளிர்பான பிராண்ட் மட்டும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

இந்திய நுகர்வோர் சந்தை மிகவும் போட்டி மிகுந்த ஒன்று, பழம் தின்று கொட்டை போட்டுள்ள பல நிறுவனங்கள் வர்த்தகத்திலும், புதிய பொருட்களை அறிமுகம் செய்வதிலும் தடுமாறி வரும் வேளையில் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் பிரிவைத் துவங்கி 2 வருடத்திற்குள் சந்தையில் 50, 80 வருடமாக இருக்கும் நிறுவனத்திற்கு இணையாக வளர்ந்துள்ளார்.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் லிமிடெட் (RCPL) பிரிவின் செயல்பாட்டைப் பிற நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் Emami நிறுவனம் 2022-23 நிதிய ஆண்டில் 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனை செய்துள்ளது.
அதேபோல், ஓரல் பராமரிப்பு சந்தையில் முன்னணி நிறுவனமான Colgate-Palmolive (India) 2022-23 நிதிய ஆண்டில் 5,226 கோடி ரூபாய் மதிப்பிலான வருவாயை ஈட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனம் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
இதுவரை பட்டியலிடப்பட்ட நுகர்பொருள் நிறுவனங்கள் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதி நிலவரத்தை இன்னும் அறிவிக்கவில்லை. ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் (RCPL) நவம்பர் 30, 2022 அன்று அதன் முறையான செயல்பாடுகளைத் தொடங்கியது.
கேம்பா கோலா மற்றும் இண்டிபெண்டன்ஸ் போன்ற பிராண்டுகளைக் கொண்ட RCPL, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குளிர் பானங்கள் மூலம் விற்பனை வளர்ச்சி வேகத்தைத் தொடர திட்டமிட்டுள்ளது. கேம்பா கோலா குளிர்பானத்தின் விற்பனை அதிகரிக்க, தனது தாய் நிறுவனத்திடமிருந்து 500 - 700 கோடி வரையிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய பாட்டில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் ரீடைல் வர்த்தக பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் கீழ் தான் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட் (RCPL) இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் மட்டும் விற்கப்படுகிறது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம் 2023-24 நிதியாண்டு வருவாயில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரானா கடைகளில் தனது பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் 1,000 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது, மீதமுள்ள தொகை ரிலையன்ஸ் ரீடைல் மளிகை கடைகளின் வாயிலாக பெறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் 5,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications