முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் போட்டி மிகுந்த குளிர்பான சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பெப்சி, கோகோ கோலா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய சந்தையில் புதிய பிராண்டை கொண்டு வந்து வெற்றி பெறுவது என்பது எளிதான காரியமில்லை.
இந்த மாபெரும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் முகேஷ் அம்பானி பல தசாப்தங்களாக பழமையான பிராண்ட் கேம்பா கோலாவை புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்து வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது என்பது முற்றிலும் மாறுப்பட்ட ஒன்று.

கேம்பா கோலா-வை அறிமுகம் செய்யும் போதே பெரிய அளவிலான குறைவான விலைக்கு கொண்டு வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்திய குளிர்பான சந்தையில் அதிகபட்ச பங்கை கைப்பற்றும் நோக்கத்துடன் முக்கியமான பணியில் தற்போது இறங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும், அனைத்து கிராமங்களிலும் கேம்பா கோலா கிடைக்க வேண்டும் இதற்கு உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும், இதேவேளையில் அனைத்து வடிவத்திலும் குளிர்பானத்தை மக்கள் கையில் கொடுக்க வேண்டும்.
இதை சாத்தியப்படுத்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் காளிமார்க் பிராண்டு உடன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக ஒப்பந்தம் செய்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை தொடர்ந்து இலங்கை நிறுவனத்துடன் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கை நாட்டின் மூத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் நிறுவனம் அலுமினியம் கேன்களில் கேம்பா கோலாவை பேக்கிங் செய்து விநியோகம் செய்ய உள்ளது.
சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் வரும் காலத்தில் பேக்கிங் பணிக்காக பேக்கேஜிங் ஆலையை இந்தியாவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் வரையில், சிலோன் பெவரேஜஸ் இலங்கை தொழிற்சாலையில் இருந்து டின்னில் அடைக்கப்பட்ட காம்பா கோலா தயாரித்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திடமிருந்து காம்பா கோலாவை 2022 இல் வாங்கியது. அதன் பிறகு ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் இந்த பிராண்டிற்கு புதிய தோற்றத்தைக் கொடுத்து சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட தற்போது நாட்டின் பல பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications