இந்திய வர்த்தக சந்தையில் அனைத்து துறையிலும் தன்னுடைய பிராண்ட் இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரியல் எஸ்டேட் துறையிலும் பல வருடமாக சத்தமில்லாமல் அசத்தி வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனம் டெல்லி - என்சிஆர் அருகே உலகத்தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்கி வருகிறது. MET நகரம் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஹரியானாவின் புதிய பொருளாதார மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

MET நகரம் 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 76 புதிய நிறுவனங்களிடமிருந்து 1,200 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனாலேயே MET நகரம் வட இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டியாக உயர்ந்துள்ளது.
MET நகரம் என்பது தொழில்சாலைகளை ஈர்க்கும் ஒரு முக்கிய பொருளாதார பகுதியாக இருந்தாலும், இங்கு குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், போக்குவரத்து கட்டமைப்புகள் என ஒரு நகரத்துக்கு தேவையான அனைத்தும் ஒருங்கிணைந்து அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் படி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் உருவாக்கி வரும் MET நகரத்தில் புதிய வீடு கட்ட திட்டமிட்டு சுமார் 1200 பேர் மொத்த 2000 வீட்டு மனைகளை வாங்கியுள்ளனர். இதன் மூலம் இந்த பகுதியில் மட்டும் குறைந்தது 6000 முதல் 10000 பேர் நிரந்தரமாக இந்த வீட்டில் குடியிருக்க உள்ளனர்.
மேலும் முகேஷ் அம்பானி கட்டமைத்து வரும் இந்த MET ஸ்மார்ட் சிட்டி ஏற்கனவே ஏழு நாடுகளை சேர்ந்த பல முன்னணி பிராண்டுகள் உட்பட சுமார் 450 நிறுவனங்களை முதலீடு செய்து தொழிற்சாலை, தயாரிப்பு தளம் அமைக்க பேச்சுவார்க்தை நடந்து வருகிறது.
சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த MET நகரத்தை மாடல் எகனாமிக் டவுன்ஷிப் லிமிடெட் என்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இதனாலேயே இந்த ஸ்மார்ட் சிட்டி MET நகரம் என செல்லமாக அழைக்கப்படுகிறது.
ஹரியானா-வில் Jhajjar என்னும் பகுதியில் இந்த 8000 ஏக்கர் பரப்பளவு கொண்ட MET சிட்டி அமைக்கப்படும் வேளையில், இந்த பகுதியை சுற்றி தான் டெல்லி, குருகிராம், நொய்டா, என்சிஆர் பகுதிகள் உள்ளது. சாலை வழி போக்கவரத்தை Kundli Manesar Palwal (KMP) Expressway, வான்வழியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இணைக்கிறது.


Click it and Unblock the Notifications