இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் அனைவரும் தங்களுடைய வர்த்தகம் மற்றும் சொத்துக்களை அதிகளவில் மறுசீரமைப்பு செய்து வருகின்றனர். இன்று காலை அதானி வில்மார் நிறுவனத்தில் இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி வைத்திருக்கும் 44 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியானதில் வில்மார் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிந்தது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறை முதலீடு மட்டுமே செய்யும் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி எப்போதும் இல்லாமல் தான் வாங்கிய வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி அமெரிக்க, பிரிட்டன் என பல நாடுகளில் பல்வேறு ரியல் எஸ்டேட் சொத்துகளை வைத்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் முக்கியமான பகுதியான மன்ஹாட்டன்-ல் வெஸ்ட் வில்லேஜ் என்ற பகுகியில் இருக்கும் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விற்பனை செய்துள்ளார். Superior Ink என அழைக்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 4வது தளத்தில் முகேஷ் அம்பானி சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருந்தார்.
இந்த வீடு சுமார் 2,406 சதுரடி கொண்ட ஆடம்பர வீடு, இதை தற்போது முகேஷ் அம்பானி சுமார் 9 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 74.5 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்ய உள்ளதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆடம்பர வீட்டில் 2 பெட்ரூம், 3 1⁄2 பாத்ரூம் கொண்டது, மேலும் ஆடம்பரம் மற்றும் மார்டன் டிசைன் கொண்டது.
மன்ஹாட்டன்-ல் உள்ள Superior Ink அப்பார்ட்மென்ட்-ல் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் Hilary Swank, நாஸ்கார் புகழ் Jimmie Johnson, டிசைனர் Marc Jacobs, பில்லியனர் Leslie Alexander ஆகியோரும் உள்ளனர். இந்த மன்ஹாட்டன் முக்கியமான பகுதியில் Superior Ink அப்பார்ட்மென்ட் 2009ல் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி பொதுவாக எந்த ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் விற்பனை செய்தது கிடையாது, கொரோனா காலத்தில் கூட பிரிட்டன் நாட்டில் stoke park என்னும் பாரம்பரியமான மாளிகை மற்றும் அதை சுற்றியுள்ள நிலத்தையும் வாங்கினார் முகேஷ் அம்பானி. அமெரிக்காவில் ஒரு பல அடுக்கு மாடி கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.
இதனால் கடந்த 20 வருடத்தில் முதல் முறையாக முகேஷ் அம்பானி ஒரு ரியல் எஸ்டேட் சொத்தை விற்பனை செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications