ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாகத் துவங்கி நாட்டு மக்கள் அனைவரையும் தினமும் 5 மணிநேரம் டீவி, போன் முன்பு உட்கார வைத்துள்ளது. ஐபிஎல் 2024 தொடக்க போட்டியை ஜியோ சினிமா தளத்தில் சுமார் 12 கோடி பார்வையாளர்கள் பார்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டிகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது வருமானம் ஈட்ட சிறந்த வாய்ப்பு போல் தெரிகிறதா? ஆனால் ஜியோ சினிமா முற்றிலும் இலவசம், இதில் எப்படி முகேஷ் அம்பானி சம்பாதிப்பார்..?

டிஜிட்டல் ஸ்ட்ரிமிங் உரிமை டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இருந்தபோது, ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதற்குக் கட்டணம் விதித்திருந்தனர். ஐபிஎல் 2022 போட்டிகளைப் பார்ப்பதற்கு ரூ.1499 சந்தா கட்டணமாக வசூலித்தனர்.
இதன் மூலம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் 2022 இல் சந்தா கட்டணத்தின் மூலம் சுமார் ரூ.1200 கோடி வருமானம் ஈட்டியது. இதோடு போட்டியின் போது விளம்பரங்களையும் ஒளிபரப்பு செய்ததன் மூலம் சுமார் ரூ.1100 கோடி வரை சம்பாதித்தது.
அப்படியென்றால், ஏன் முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா அதே உத்தியைக் கையாளவில்லை? அதற்கு ஒரு காரணம் இருக்கிறது! மக்களை இலவசமாகப் போட்டிகளைப் பார்க்க அனுமதிப்பதன் மூலம், ஜியோ சினிமா அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடிந்தது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்போம். டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஒளிபரப்பிய ஐபிஎல் 2022 தொடரின் தொடக்கப் போட்டியை சுமார் 8 கோடி பேர் பார்த்தனர். மறுபுறம், ஜியோ சினிமா ஒளிபரப்பிய ஐபிஎல் 2024 தொடரின் தொடக்கப் போட்டியை சுமார் 12 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இலவசம் என்ற ஒரு காரணத்தாலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 50% அதிகரித்துள்ளது. இதுவும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய முதல் வருடத்திலேயே இது நடந்துள்ளது.
அதிக பார்வையாளர்களை வைத்திருப்பதைக் காட்டி ஜியோ சினிமா, விளம்பர வழங்குபவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து அவர்களின் விளம்பரங்களைக் காண்பிக்கிறது. இது விளம்பரம் செய்யும் பிராண்டுகளுக்கும் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்தது.
ஐபிஎல் 2023ல் ஜியோ சினிமா மூலம் ரூ.3239 கோடி என்ற அதிர்ச்சியூட்டும் தொகையை விளம்பர வருமானமாக ஈட்டியது. இது டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஐபிஎல் 2022 இல் சந்தா கட்டணம் மற்றும் விளம்பர வருமானம் இரண்டையும் சேர்த்து ஈட்டியதை விட அதிகம்!
ஜியோ சினிமா-வின் இந்த உத்தி நீண்ட காலத்திற்குச் சிறந்ததா..? இல்லையெனில் முகேஷ் அம்பானி அடுத்த 2 வருடத்தில் கட்டணத்தை வசூலிக்கத் துவங்குவாரா..? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்துக்களில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications