கிரிக்கெட் மைதானத்தில் முகேஷ் அம்பானி - சுந்தர் பிச்சை சந்திப்பு... என்ன பேசியிருப்பார்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிக்கெட் என்பது உலகின் சில நாடுகளில் மட்டும் விளையாடப்பட்டாலும் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது ரசிகர்கள் அதனை திருவிழாவாக கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களாக சாமானிய மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்க்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் ஒரே மைதானத்தில் சந்தித்து கொண்ட அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது.

6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! 6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!

100 பந்துகள் கிரிக்கெட்

100 பந்துகள் கிரிக்கெட்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி சமீபத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க சென்றிருந்தார்.

முகேஷ் அம்பானி - சுந்தர் பிச்சை

முகேஷ் அம்பானி - சுந்தர் பிச்சை

அதே போட்டியை பார்க்க கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் வந்திருந்த நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் சுந்தர்பிச்சை ஆகிய இருவரும் மைதானத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டு வணக்கம் செலுத்தி கொண்டனர். மேலும் இருவரும் கிரிக்கெட் மற்றும் பொது விஷயங்கள் குறித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

ரவி சாஸ்திரி டுவிட்
 

ரவி சாஸ்திரி டுவிட்

இந்த போட்டியின் வர்ணனையாளராக இருக்கும் ரவி சாஸ்திரி அவர்கள் முகேஷ் அம்பானி, சுந்தர் பிச்சை ஆகிய இருவருடனும் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் இரண்டு நபர்களான முகேஷ் அம்பானி மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தேன்' என்று பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் ஐபிஎல் அணி

முகேஷ் அம்பானியின் ஐபிஎல் அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் உள்ள அணிகளில் ஒன்றான மும்பை அணிக்கு உரிமையாளரான முகேஷ் அம்பானி, விரைவில் கிரிக்கெட் தொடர்பான முதலீட்டை அதிகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் பிச்சையின் கிரிக்கெட் ஆர்வம்

சுந்தர் பிச்சையின் கிரிக்கெட் ஆர்வம்

அதேபோல் கிரிக்கெட் விளையாட்டை சிறுவயது முதல் தனது விருப்பத்துக்குரிய விளையாட்டாக மதித்து வரும் சுந்தர்பிச்சை அவர்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் கிரிக்கெட் விளையாட தவறுவதில்லை என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அவர் உலகின் பல மைதானங்களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க சென்றுள்ளார் என்பது குறிப்ப்டத்தக்கது.

அபூர்வ சந்திப்பு

அபூர்வ சந்திப்பு

அந்த வகையில் உலக அளவில் பிரபலமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இரண்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஒரே மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தது அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani, Sundar Pichai catch up for a cricket game at Lord's with Ravi Shastri

Mukesh Ambani, Sundar Pichai catch up for a cricket game at Lord's with Ravi Shastri | கிரிக்கெட் மைதானத்தில் முகேஷ் அம்பானி - சுந்தர் பிச்சை சந்திப்பு... என்ன பேசியிருப்பார்கள்?
Story first published: Thursday, August 11, 2022, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X