இந்தியாவின் பெரும் பணக்காரர், பெரும் தொழிலதிபர் என பல பட்டங்களுக்கு சொந்தகாரரான முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), சீன கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ மற்றும் அப்ளையன்ஸ் பொருட்கள் உற்பத்தியாளரான ஹையர் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் பெரும் பகுதி பங்கைப் பெறுவதற்கு போட்டிபோட்டு வருகிறது.
முகேஷ் அம்பானி எண்ணெய் துறையில் இருந்து கடந்த 10 வருடத்தில் டெலிகாம், ரீடைல் பிரிவில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்தது போது, கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தாயரிப்பில் இறங்க முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே சென்னையில் ரிலையன்ஸ் மற்றும் அமெரிக்காவின் Sanmina நிறுவனத்துடன் கூட்டணியில் இயங்கி வருகிறது. இதற்கு அடித்தக்கட்டமாக தற்போது ஏசி மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

இந்தியாவில் இயங்கி வரும் சீன பிராண்டான ஹையர் தனது வர்த்தகத்தையும் , முதலீட்டையும் அதிகரித்த இந்தியாவில் புதிய கட்டுரப்பாடுகளுக்கு இதை செய்திடவும் உள்நாட்டு நிறுவனத்தை கூட்டணியாக மாற்ற வேண்டிய அசியமாகியுள்ளது. இதேவேளையில் இந்தியாவில் சீன நிறுவனக்கள் புதிய முதலீடுகளை செய்வதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இதை சமாளிக்கவும் பங்குகளை குறைத்து கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ஹையர் நிறுவனம் இதற்காக 25% முதல் 51% வரை பங்குகளை விற்கத் திட்டமிட்டு உள்ளது, மேலும் ஹையர் தனது இந்திய வர்த்தகத்தை 2 - 2.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது. இந்த பங்குகளை தான் முகேஷ் அம்பானி வாங்க போட்டிப்போட்டு வருகிறது. சரியாருடன் போட்டி ஜியோ-வுக்கு ஒவ்வொரு இடத்திலும் கடுமையாக போட்டி கொடுக்கும் ஏர்டெல் சுனில் மிட்டல், தனது பார்தி குழுமம் வாயிலாக ஹையர் நிறுவன பங்குகளை வாங்க போட்டிப்போட்டு வருகிறார்.
இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் ஹையர் அப்ளையன்ஸஸ் இந்தியா, எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் எம்ஜி மோட்டார்ஸ் மாடலைப் பின்பற்றி, இந்திய நிறுவனம் ஒற்றை பெரிய பங்குதாரராக மாறி தனது நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வருகிறது.
ஹையர் நிறுவனத்திற்கு சரியாக கூட்டணி கிடைத்தால் 51% வரையிலான பங்குகளை விற்க தயார் என்ற நிலையில் உள்ளது. இதனால் ரிலையன்ஸ், பார்தி குழுமம் மட்டும் அல்லாமல் டாபர் பிராண்டின் பர்மன் குடும்பம், பிகே கோங்கா, உதய் கோட்டாக், அமித் ஜாதியா குடும்பம் என பல முன்னணி வர்த்தக குடும்பங்கள் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களின் கூட்டணியில் இப்போட்டியில் குதித்துள்ளது.
சீன நிறுவனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களால், அமெரிக்க சந்தையில் தங்கள் பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால், இந்தியாவில் தங்கள் வணிகத்தை விரிவாக்க முயல்கின்றன. இதனால், இந்திய நிறுவனங்களுக்கு பங்கு விற்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்க சீன நிறுவனங்கள் தயாராக உள்ளன.
இதேபோல் இந்திய அரசும் தற்போது கூட்டணி அடிப்படையில் சீன நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கு சில முக்கியமான தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வரும் வேளையில் ஹையர் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications