நம் ஊரில் பேச்சு வாக்கில், யாராவது ஒருவர் சட்டென சில வருடங்களுக்குள் பணக்காரர் ஆகிவிட்டால் "அவனுக்கு என்னப்பா அம்பானி ஆயிட்டான்" எனச் சொல்வார்கள்.
உலக அழகி என்றால் வெகு ஜன மக்களுக்கு எல்லாம் எப்படி ஐஸ்வர்யா ராய் தான் நினைவுக்கு வருவாரோ, அப்படி பணக்காரர் என்றாலே நமக்கு எல்லாம் அம்பானி தான் நினைவுக்கு வருகிறார்.
அப்படி பெயரும் புகழும் பெற்ற முகேஷ் அம்பானி, தற்போது இன்னொரு புகழையும் பெற்று இருக்கிறார்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உதாரணமாக கடந்த ஏப்ரல் 2020-ல் வெறும் 36.8 பில்லியன் டாலராக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று 71 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ப்ளூம்பெர்க் கணக்குப் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நேற்று 72.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது.
சமீபத்தைய முந்தல்
சமீபத்தில் தான் உலகின் முன்னனி பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டை, சொத்து மதிப்பு கணக்கில் முந்தினார் அம்பானி. வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு நேறைய தேதிக்கு 69.7 பில்லியன் டாலராக இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் பத்திரிகை. அப்படி மீண்டும் ஒரு முக்கியமான பணக்காரர் ஒருவரை முந்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி.
லாரி பேஜ்
இவர் பெயரை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். உலகின் பிரபலமான கூகுள் கம்பெனியின் தாய் நிறுவனான Alphabet கம்பெனியின் துணை நிறுவனர் மற்றும் இயக்குநர் குழுவில் ஒருவரான லாரி பேஜ். இவரின் சொத்து மதிப்பு ப்ளூம்பெர்க் கணக்குப் படி, 71.6 பில்லியன் டாலராக இருக்கிறது. இவரைத் தான் அம்பானி ஓவர் டேக் செய்து இருக்கிறார்.
ரிலையன்ஸ் பங்குகள்
நேற்று ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை சுமாராக 1,900 ருபாயைத் தாண்டி வர்த்தகமானது. இதனால் முகேஷ் அம்பானி, லாரி பேஜையும் பின்னுக்குத் தள்ளி, உலகின் 6-வது பெரிய பணக்காரர் என்கிற பட்டத்தைப் பெற்று இருக்கிறார். இதற்குப் மேலும் அம்பானி முன்னேறுவது கொஞ்சம் சிரமம் தான்.
டாப் 5 பேர்
உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பிசாஸ் 184 பில்லியன்,
பில் கேட்ஸ் 115 பில்லியன்,
பெர்னார்ட் அர்னால்ட் 94 பில்லியன்,
மார்க் சக்கர் பெர்க் 90 பில்லியன்,
ஸ்டீவ் பால்மர் 74.6 பில்லியன் டாலருடன் இருக்கிறார்கள். இதில் ஸ்டீவ் பால்மரைக் கூட நம் அம்பானி முந்த வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவுக்கு பெருமை தான்
அப்படி ஒருவேளை ஸ்டீவ் பால்மரை முந்திவிட்டு, உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி வந்தால், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார் எனப் பெருமையாகச் சொல்லலாம். நடக்குமா? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை தான் பதில் சொல்ல வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications