ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் செய்த முதலீட்டின் காரணமாக ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சரிந்த முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துச் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜாக் மா 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பேஸ்புக் -ஜியோ முதலீட்டு செய்தியின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகப் பங்குச்சந்தையில் ரிலையண்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்தது.
இதன் மூலம் புதன்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4.69 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்து 49.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது.
பங்கு மதிப்பு
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாள் வர்த்தக முடிவிலும் பங்கு மதிப்பு உயர்வு மற்றும் சரிவின் மூலம் மாறுபடும்.
இந்த வகையில் தான் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு பங்கு மதிப்பு உயர்வின் மூலம் உயர்வடைந்து ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கொரோனா
உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகில் அனைத்து பணக்காரர்களும் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் பங்கு மதிப்பை இழந்து சொத்து மதிப்பு அளவில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டனர். ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெருவாரியான வருவாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கெமிக்கல் துறையைச் சார்ந்து இருக்கிறது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு அதிகளவில் குறைந்துள்ள நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் சரிந்தது.
29 வருட சரிவு
இந்தச் சரிவின் காரணமாக 2020ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் சுமார் 14 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்தார் முகேஷ் அம்பானி. இது கடந்த 29 வருடத்தில் முகேஷ் அம்பானி பார்த்திராத ஒரு மாபெரும் சரிவு எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் முதலீடு
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் செய்த முதலீட்டின் மூலம் புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் சுமார் அதிகப்படியாக 10 சதவீதம் வரையில் உயர்ந்தது. இந்த உயர்வின் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4.69 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மீண்டும் ஆசியப் பணக்காரர்கள் பட்டியில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.
ஜாக் மா
மார்ச் மாத வர்த்தகப் பாதிப்பில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகளவில் சரிந்த நிலையில் அலிபாபா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக்மா ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். ஆனால் இப்போது 46 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜாக் மா 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications