திங்களன்று ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 14% வரை உயர்ந்து மும்பை பங்குச்சந்தையில் 288.75 ரூபாய் வரையில் உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து அதன் நிதியியல் பிரிவைத் தனியாகப் பிரித்ததிலிருந்து முதலீட்டாளர்கள் பெரும் லாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இன்று இதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகளின் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..? சமீபத்தில் தான் ஜியோ ஃபைனான்சியல் தனது வர்த்தக மாடலை மாற்றியதன் மூலம் பங்குச்சந்தையில் மந்த நிலையை எதிர்கொண்டது. இந்த நிலையில் இன்று பதிவான திடீர் உயர்வுக்கு என்ன காரணம்.

பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ், தனது வேலெட் வர்த்தகத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் NBFC மற்றும் தனியார் துறை முன்னணி வங்கியான HDFC வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது.
ஒரு மூத்த ஃபின்டெக் மற்றும் வங்கித் துறையின் நிர்வாகி ஒருவர் பிசினஸ் லைன் பத்திரியிடம், Paytm Payments பேங்க்-ன் கீழ் இயங்கும் Paytm வேலெட் வர்த்தகத்தை HDFC வங்கி மற்றும் ஜியோ ஃபைனான்சியல் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பேடிஎம்-ன் விஜய் சேகர் ஷர்மாவின் டீம் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தனது வர்த்தகத்தை விற்பதற்காக ஜியோ பைனான்சியல் சேவை நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், RBI தடைக்கு முன்னதாக HDFC வங்கியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாகத் தெரிகிறது.
பிப்ரவரி 5ஆம் தேதி மாலை முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்எல்), Paytm வேலெட் வர்த்தகத்தை பெறுவதற்கு One 97 Communications நிறுவனத்துடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து பிரச்சனைக்கும் துவக்கப் புள்ளியாக இருந்தது, நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை விதிமுறைக்கு மீறி நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஓரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications