இந்தியாவில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வரும் வேளையில், பல புதிய துறையில் களமிறங்கி வருகிறது. அந்த வகையில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் "Wyzr" என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் முதலில் வெயிலுக்கு ஏற்றார்போல் Wyzr பிராண்டின் கீழ் ஏர் கூலர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து Wyzr பிராண்டின் கீழ் விரைவில் தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர்கள், சிறிய மின்சாரக் கருவிகள் மற்றும் LED பல்புகள் ஆகியவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்க முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளது, மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். Wyzr பிராண்டின் கீழ் பொருட்களை தயாரிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது நாட்டின் முன்னணி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அம்பானி தற்போது உள்நாட்டு ஒப்பந்த உற்பத்தியாளர்களான டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் Mirc எலக்ட்ரானிக்ஸ் (ஓனிடா நிறுவனத்தின் தாய் நிறுவனம்) ஆகியவற்றுடன் உற்பத்தி ஒப்பந்தங்களை முடிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Wyzr பிராண்ட்-காக சொந்தமாக உற்பத்தி ஆலைகளை நிறுவும் திட்டத்துடன் இந்த பேச்சுவார்த்தையை துவங்கியுள்ள. இந்த தொழிற்சாலை எங்கு அமைக்கப்படும், யாருடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
2022 ஆம் ஆண்டில், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமான சான்மினா-வின் இந்திய கிளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,670 கோடி ரூபாய் செலவில் 50.1% பங்குகளை கையகப்படுத்தியது. இதன் மூலம், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் உற்பத்தி துறையில் கால் பதித்தார் முகேஷ் அம்பானி.
சென்னையில் சான்மினா நிறுவனத்திற்கு 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாபெரும் உற்பத்தி வளாகம் உள்ளது. இங்கு Wyzr தயாரிப்புகளுக்கான உற்பத்தி ஆலை அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
ரிலையன்ஸ் ரீடைல் முன்பு "Reconnect" என்ற பிராண்டின் கீழ் தொலைக்காட்சிகள் மற்றும் சில வீட்டுக் கருவிகளை விற்பனை செய்ய முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
Reconnect பிராண்டின் கீழ் விற்கப்பட்ட தயாரிப்புகள் அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டவை. மேலும் இந்த பொருட்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
ஃபியூச்சர் குழுமத்தின் Koryo மற்றும் டாடா குழுமத்தின் Croma ஆகிய ரீடைல் கடைகள் உடன் போட்டிபோட Reconnect பிராண்ட் உருவாக்கப்பட்டது. தற்போது, Reconnect பிராண்டை ரிலையன்ஸ் ரீடைல் accessories விற்பனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications