ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, தனது திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்படும் விழாக்களுக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த தனது தாயார் நீதா அம்பானிக்கு நெகிழ்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் மற்றும் மகளின் திருமணம் மும்பை ஜியோ வோல்டு சென்டரிலும், உத்யபூர் மாளிகையிலும் நடைபெற்றது. ஆனால் அனந்த் அம்பானி திருமணம் கொஞ்சம் ஸ்பெஷல்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய 2000 ஏக்கர் காட்டில் இதுவரையில் அம்பானி குடும்பமும், ரிலையன்ஸ் ஊழியர்கள் மட்டுமே சென்ற நிலையில், முதல் முறையாக வெளியுலகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் இயற்கை மற்றும் விலகுங்குள் மீதான காதல் பற்றி வனந்திரா மூலம் உலகமே அறிந்தது. இந்த நிலையில் அம்பானி குடும்பம் கடந்த 20 வருடத்தில் உருவாக்கிய காடு மற்றும் அனந்த் அம்பானி காப்பாற்றி, பாதுகாத்து வரும் விலங்குகள் மத்தியில் நடக்கும் இந்த திருமணத்தின் ஏற்பாடுகள் மிகவும் கடினமானது, சவாலானது.
இந்த நிலையில் முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, அம்மா, நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இவை அனைத்தையும் உருவாக்கியது என் அம்மா தான், வேறு யாரும் இல்லை.
கடந்த நான்கு மாதங்களாக, என் அம்மா எதையும் பொருட்படுத்தாமல், தன்னலம் இல்லாமல் கடுமையாக உழைத்தார். அவர் ஒரு நாளைக்கு 18-19 மணி நேரம் வரை வேலை செய்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அம்மாவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவன் என கூறினார் அனந்த் அம்பானி.
மேலும், தனது சிறுவயது முதலே சந்தித்து வரும் உடல்நலக் குறைபாடுகளில் தனக்கு உறுதுணை அளித்த தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். "என் தந்தை மற்றும் தாய் எப்போதும் என்னுடன் இருந்துள்ளனர். நான் ஏதாவது செய்ய நினைத்தால், அதை என்னால் செய்ய முடியும் என்று அவர்கள் என்னை பெரிய அளவில் ஊக்குவித்தனர் என்று அனந்த் அம்பானி கூறும்போது, அருகில் இருந்த முகேஷ் அம்பானி கண்கலங்கி கைதட்டி ஆதரவு தெரிவித்தார்.
அனந்த் அம்பானியின் இந்த உருக்கமான பேச்சு விழாவில் கலந்து கொண்டிருந்தவர்களையும் நெகிழச் செய்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications