'இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் 2025' குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், பெரும் சொத்து மதிப்பை கொண்டு மீண்டும் இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.9.55 லட்சம் கோடி ஆகும்.
அம்பானி vs அதானி : கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளனர். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.15 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம், இந்தியாவின் உச்சகட்ட செல்வம் இந்த இரு பெரும் தொழிலதிபர்கள் குடும்பங்களுக்கு இடையேதான் உள்ளது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண் : இந்த ஆண்டுப் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் புதிதாக HCL-இன் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் அடியெடுத்து வைத்துள்ளனர். இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம், ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதேபோல் நான்காம் இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சைரஸ் எஸ். பூனாவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.2,46,460 கோடி சொத்து மதிப்புடனும், ஐந்தாம் இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.2,32,850 கோடி சொத்து மதிப்புடனும் உள்ளனர். மேலும், இந்தியாவின் செல்வ நிலப்பரப்பை புதியவர்கள் மாற்றி அமைப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mutual Fund முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை பாருங்க
இந்தப் பட்டியல், இந்தியாவில் பில்லியனர்கள் வகுப்பின் அதிவேக வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் உள்ள மொத்தப் பில்லியனர்களின் எண்ணிக்கை இப்போது 350-ஐ தாண்டியுள்ளது. இந்தப் பட்டியல் முதன்முதலில் வெளியான 13 ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையைவிட இது 6 மடங்கு அதிகம் ஆகும். பட்டியலில் இடம்பெற்ற அனைத்துப் பணக்காரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடி ஆகும். இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்டப் பாதியாகும்.
வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் : இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் இருப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டுப் பட்டியலில் மொத்தம் 101 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 26 பேர் டாலர் பில்லியனர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் செல்வத்தை உருவாக்குவதில் சுயாதீனமாக (Self made) முன்னேறியவர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பட்டியலில் உள்ளவர்களில் 66% பேர் சுயமாகச் செல்வத்தை ஈட்டியவர்கள், 74% பேர் தங்கள் செல்வத்தை ஆரம்பத்தில் இருந்து உருவாக்கியவர்கள் ஆவர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications