டாடா குழுவின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் ஒருவர்.
முகேஷ் அம்பானி தனது ட்விட்டர் பக்கத்தில், ரத்தன் டாடாவின் மறைவு இந்தியா மற்றும் இந்திய தொழில்துறைக்கு மிகுந்த துக்கத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பர்சனல் அளவில், ரத்தன் டாடாவின் மறைவு தனக்கு மிகுந்த துக்கத்தை அளித்துள்ளதாகவும், அவரது மறைவால் ஒரு அன்பான நண்பரை இழந்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அவரது பல சந்திப்புகள் தனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளதாகவும், அவரது உன்னதமான குணம் மற்றும் நல்ல மனிதாபிமானம் அவரின் மீதான மரியாதை அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடா எதிர்காலத்தை கணித்து நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் ஒரு முக்கியமான தொழிலதிபர் மற்றும் மிகப்பெரிய நன்கொடையாளர், எப்போதும் சமுதாயத்தின் மேன்மையில் அதிகப்படியான கவனம் செலுத்தினார் என்றும் முகேஷ் அம்பானி பாராட்டியுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவால் இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மற்றும் தாயுள்ளம் கொண்ட ஒருவரை இழந்துள்ளது என்றும், அவர் இந்தியாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன், உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்றும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
1991 இல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து டாடா குழுமத்தை 70 மடங்கு வளர்த்து, அதை ஒரு சர்வதேச நிறுவனமாக மாற்றியதற்கு ரத்தன் டாடா காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸ், நிதா மற்றும் அம்பானி குடும்பத்தின் சார்பில், டாடா குடும்பத்திற்கும், டாடா குழும உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
"ரத்தன், நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள். ஓம் சாந்தி," என்று முகேஷ் அம்பானி தனது இரங்கல் டிவீட்டர் பதிவை முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications