இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையை பிடிக்க இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் கடுமையான போட்டிப்போட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் லாக்டவுனில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் இறங்கிய ஜியோமார்ட் தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய மெசேஜிங் சேவை தளமான வாட்ஸ்அப் உடன் இணைந்து புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் ஈகாமர்ஸ் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியும், அதேபோல் இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்-க்கு இணையாக வளர முடியும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நம்பப்படுகிறது.
வாட்ஸ்அப் - ஜியோமார்ட்
இந்தியா டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வாட்ஸ்அப் உடன் இணைந்து "tap and chat" ஆப்ஷன் மூலம் மக்களுக்கு மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோமார்ட் துவங்கியுள்ளது.
டெலிவரி கட்டணம்
இந்தச் சேவையின் கீழ் ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கட்டணம் இல்லாமல் பொருட்களை வழங்குவதாகவும், இதேபோல் குறைந்த தொகை ஆர்டர் போன்ற எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை என ஜியோமார்ட் தனது 90 நொடி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளது.
வீட்டுக்குத் தேவையான பொருட்கள்
மேலும் வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையின் கீழ் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், உணவு பொருட்கள் என வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாட்ஸ்அப் வாயிலாக ஜியோமார்ட் செயலியில் ஆர்டர் செய்ய முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்படி டெலிகாம் சேவையில் மிகவும் குறைவான தொகைக்குச் சேவையைக் கொடுத்து வாடிக்கையாளர்களைப் பெற்றதோ, அதேபோல் குறைவான விலையில் சேவை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் ஜியோ
தற்போது வாட்ஸ்அப் உடனான கூட்டணி மூலம் ஜியோமார்ட் தளத்தில் சுமார் 530 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஜியோ டெலிகாம் சேவையில் இருக்கும் 425 மில்லியன் வாடிக்கையாளர்களும் ஜியோமார்ட் சேவையைப் பெற முடியும்.
சாத்தியமா..?!
ஆனால் ஜியோமார்ட் நிறுவனத்தால் வாட்ஸ்அப் மற்றும் டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டு அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இணையான வர்த்தகத்தைப் பெற முடியுமா..? என்ற கேள்வி எழுகிறது. சரி ஜியோமார்ட் சேவையை நீங்கள் பயன்படுத்தி இருந்தால் உங்கள் அனுபவத்தைக் கமெண்ட்-ல் பதிவிடுங்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications