முகேஷ் அம்பானி ஒவ்வொரு துறையிலும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி தொடர்ந்து வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார்.
இதற்கு ஏற்றார் போல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் உபரியாக நிதி ஆதாரங்கள் ஒருபக்கமும், கடனில்லா நிறுவனம் என்ற பலம் மறுபக்கமும் இருக்கும் காரணத்தால் பெரிய அளவிலான வளர்ச்சி பணிகளை மிகவும் எளிதாகச் சாதித்து வருகிறார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி தற்போது எண்ணெய் வர்த்தக பிரிவின் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈட்டும் பணியில் பிசியாக இருக்கும் இதேவேளையில் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் முக்கியமான திட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.
முகேஷ் அம்பானியில் வாய்காம்18
முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பொழுதுபோக்கு நிறுவனமான வாய்காம் 18 நிறுவனம் இத்தாலி நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் புட்பால் லீக் Serie A போட்டிகளின் அடுத்த 3 சீசன்களை இந்தியாவில் ஒளிபரப்பவும், டிஜிட்டல் மீடியா ரைட்ஸ்-ஐயும் மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் மாபெரும் திட்டம்
மீடியா துறை வல்லுனர்கள் இந்த ஒப்பந்தம் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் வாய்காம் 18 நிறுவனத்திற்கு வலிமையான இடத்தைப் பெற்றுத் தரும் எனக் கூறுகின்றனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமே என்பதால் நாட்டில் இருக்கும் அனைத்து புட்பால் ரசிகர்களையும் ஓரே நேரத்தில் ஈர்க்க மிகப்பெரிய திட்டத்தை ரிலையன்ஸ் தீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட், டென்னிஸ், புட்பால்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையிலான வாய்காம் 18 ஏற்கனவே அபுதாபி டி10 கிரிக்கெட் போட்டிகள், ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள், லா லிகா புட்பால் போட்டிகளுக்கான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் மீடியா ரைட்ஸ்-ஐ வாங்கியுள்ளது. இதில் புட்பால் லீக் Serie A போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி சனிக்கிழமை துவங்க உள்ளது. இது வூட், வாய்காம் 18 ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோவில் ஒளிபரப்பாகும்.
வாய்காம்18 கூட்டணி
வாய்காம்18 என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான வாய்காம் சிபிஎஸ் உடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளில் சேனல்களும், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான வூட் ஆகியவற்றுடனும் இயங்கி வருகிறது. இந்த மீடியா கட்டமைப்பில் விட்டுப்போய் இருக்கும் ஒன்று ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவு, அதையும் தற்போது துவங்கியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட்
முகேஷ் அம்பானி தனது வாய்காம்18 தளத்தில் அபுதாபி டி10 கிரிக்கெட் போட்டிகள், ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள், லா லிகா புட்பால் போட்டிகள், புட்பால் லீக் Serie A போட்டிகள் மூலம் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவைச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது.
அடுத்தது ஐபிஎல்
இது வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த ஐபிஎல், ஐசிசி போட்டிகள், அடுத்த வருசம் BCCI துவங்கும் போட்டிகள் அனைத்தையும் அடுத்தடுத்து கைப்பற்றி முழு ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் முழுமையாகக் கட்டமைப்பை உருவாக்கி 365 நாள் 12 மணிநேரமும் இயக்கும் ஒரு தளமாக மாறும்.
விளையாட்டுத் துறை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விளையாட்டுத் துறை என்பது புதியது இல்லை, இந்நிறுவனம் இந்தியன் சூப்பர் லீக்-ல் குறிப்பிடத்தக்கப் பங்குகளை வைத்துள்ளது, இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் முக்கிய அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வைத்துள்ளது. சர்வதேச ஓலிம்பிங் கமிட்டியில் தனி உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி நியமிக்கப்பட்டு இருந்தார்.
ஆதிக்கம்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் துறையில் பணமும் ஆதிக்கமும் இருக்கும் காரணத்தால் வருவதைத் தாண்டி கிராஸ்ரூட் அளவில் இருந்து தனது ஆதிக்கத்தை வளர்த்து உள்ளது. அனைத்து துறையிலும் வெற்றி அடையும் ரிலையன்ஸ் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் துறையில் வெற்றி அடையுமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications