குஜராத்: இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி சுமார் 1260 கோடி ரூபாய் செலவில் உலகமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஜாம்நகரில் நடைபெற்றது.
இந்த 3 நாள் விழா கோலாகலமாக நடந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள துவாரகாதீஸ்வரர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

ஆன்மீகம்: முகேஷ் அம்பானி அவ்வப்போது கோவிலுக்குச் செல்வது வழக்கம் தான், மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்கு ரெகுலராகத் தனது குடும்பத்துடன் செல்லக்கூடியவர். இதற்கு முன்பு முகேஷ் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் உடன் நாட்டின் பல கோயிலுக்குச் சென்றிருந்தார். இந்தப் புகைப்படங்கள் அப்போது பெரிய அளவில் டிரெண்டானது.
பாச மழை: இந்த 3 நாள் விழாவில் ராதிகா மெர்ச்சன்ட், முகேஷ் அம்பானியை அப்பா என அழைத்ததோடு, தனது வாழ்வில் நீங்கள் மிகவும் முக்கியமானவர் எனக் கூறியது, வந்திருந்த விருந்தினர்களை நெகிழச்செய்தது.
குஜராத்: இந்த நிலையில் முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள துவாரகாதீஸ்வரர் கோவிலுக்குத் தனியாகச் செல்லவில்லை. தனது புதிய சம்மந்தி வீரேன் மெர்ச்சன்ட், அவரது மனைவி ஷைலா மெர்ச்சன்ட் மற்றும் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலாபென் அம்பானி ஆகியோருடன் சென்றுள்ளார்.

மக்களுக்கு நன்றி: இந்த நிலையில் கோவில் தரிசனம் முடிந்து வெளியில் வந்த முகேஷ் அம்பானி பத்திரிகையாளர்களிடம் பேசினார், அப்போது ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஸ்ரீ துவாரகாதீஸ்வரரின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. ஜாம்நகர் மக்களுக்கு அவர்களது ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜாம்நகர் இப்போது சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. நானும், நீதாவும் மக்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
திருமணம் ஜூலை மாதம்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை ஜாம்நகரில் நடைபெற்றது. இந்த ஜோடி இந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications