ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி McLaren Strategic Ventures நிறுவனத்தின் Hitesh Sethia-வை அதன் Jio Financial Services நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சேர்வதற்காக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல ஆயிரம் கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்யத் தயாராக உள்ளது. இந்த நிலையில் முகேஷ் அம்பானி புதிய வர்த்தகத்தில் இறங்குவதற்காகவும், அதே நேரத்தில் புதிதாக ஒரு நிறுவனத்தை ஐபிஓ வெளியிடவும் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்து ரிஸ்க் எடுக்க தயாராகியுள்ளார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக ஐபிஓ வெளியிட்டு தனது குழுமத்தின் மதிப்பை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்கான நிறுவனம் தான் Jio Financial Services.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் தற்போது இயங்கும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், இந்த ஆண்டின் இறுதியில் பங்குச்சந்தைகளில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் non-executive chairman-ஆக ஐசிஐசிஐ மற்றும் பிரிக்ஸ் வங்கியின் முன்னாள் தலைவரான கே வி காமத்தை நியமித்தது.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஐபிஓ தொடர்பான விரிவான தகவல்களை ரிலையன்ஸ் இன்னும் வெளியிடவில்லை. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகமாகவும், ரிலையன்ஸின் நுகர்வோர் வணிகங்களின் வலையமைப்பில் டிஜிட்டல் முறையிலான நிதி திட்டங்களை வழங்கும் என முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ஒரு தனி நிறுவனமாக அறிவிக்கும் போது ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம்
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் மூலம் இந்தியாவில் பல கோடி மக்களை வகைப்படுத்தாத துறையில் இருந்து வகைப்படுத்தப்பட்ட துறைக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வகைப்படுத்தா துறையில் தான் ஆதிக்கம் நிறைந்தாக உள்ளது.
யார் இந்த ஹிதேஷ் சேத்தியா..?
இந்த நிலையில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக Hitesh Sethia என்பவரை நியமிக்க அழைப்பு விடுத்துள்ள செய்தி வியப்பு அளித்துள்ளது. யார் இவர்..? McLaren Strategic Ventures என்னும் மாபெரும் முதலீட்டு நிதியியல் சேவை நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் தலைவராக உள்ளார் Hitesh Sethia.
Hitesh Sethia - EX ஐசிஐசிஐ
இதற்கு முன்பு Hitesh Sethia ஐசிஐசிஐ வங்கியின் பல முக்கியமான பதிவிகளில் இருந்துள்ளார். 2000 முதல் ஜூன் 2022 வரையில் Hitesh Sethia ஐசிஐசிஐ வங்கியின் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர் சென்னை, டொராண்டோ, பிராங்பர்ட், லண்டன், மும்பை மற்றும் ஹாங்காங் என பல பிராந்திய வர்த்தகத்திற்கு தலைவராக இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications