இந்தியா மற்றும் ஆசியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பிரிவுகளை 3 பிள்ளைகளின் நிர்வாகத்தில் இயக்கப்படும் என அறிவித்த பின் தொடர்ந்து கோவில் கோவிலாகச் சுற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானி ஆன்மீக பயணத்தில் இறங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தனது வர்த்தக வாழ்க்கையில் மிகவும் கசப்பான அனுபவத்தை எதிர்கொண்டது தனது தந்தையின் சொத்துக்களை முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மத்தியில் பிரிக்கப்பட்ட போது தான் நடந்தது.
3 பிள்ளைகள்
இதனாலேயே முகேஷ் அம்பானி பார்த்துப் பார்த்து ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோர் மத்தியில் வர்த்தகத்தையும் பிரித்து வருகிறார். கடந்த 2 வருடமாகச் சொத்து, வர்த்தகம், முதலீடு வரையில் 3 பிரிவுகளுக்கும் தனித்தனியாகக் கணக்கிட்டுச் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி.
பத்ரிநாத், கேதார்நாத்
திருப்பதி, குருவாயூர் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியும், இளைய மகனான அனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட் உடன் தற்போது பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய கோவில்களுக்குச் சென்றுள்ளார். இது மட்டும் அல்லாமல் பத்ரி - கேதார் ஜாயின்ட் கமிட்டி-க்கு 5 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை அளிக்கத்துள்ளனர்.
முகேஷ் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்
தற்போது முகேஷ் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் திருப்பதி, குருவாயூர் சென்ற போது பல புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சென்ற வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது. முகேஷ் அம்பானியின் ஆன்மீக பயணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோவிலும், நன்கொடையும்
சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி எழுமலையான் கோவிலுக்குச் சென்று 1.5 கோடி நன்கொடை கொடுத்தார், இதைத் தொடர்ந்து கேரளாவில் இருக்கும் குவாயூர் கோவிலுக்குச் சென்று அன்னதானம் நிதி அமைப்பிற்குச் சுமார் 1.51 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் இருக்கும் நாத்வாரா-வில் இருக்கும் ஸ்ரீநாத்ஜி கோவிலுக்குச் சென்றார்.
சிங்கப்பூர்
இதே காலகட்டத்தில் தான் முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குடும்ப அலுவலகத்தை நிர்வாகம் செய்யவும் நடத்தவும் முகேஷ் அம்பானி சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காரணம்
சிங்கப்பூரில் குறைவான வரி மற்றும் பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பணக்காரர்கள் தங்களது குடும்ப அலுவலகத்தைப் பிற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் அமைக்க அதிகப்படியாக விரும்புகின்றனர்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications