ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தனது 66 வது பிறந்தநாள்-ஐ கொண்டாடினார். இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது.
முகேஷ் அம்பானி அதிகப்படியான கடவுள் பக்தி கொண்டாவராக இருக்கும் நிலையில் 66 வது பிறந்தநாள்-ஐ முன்னிட்டு முகேஷ் அம்பானி மும்பையில் இருக்கும் மிகவும் பிரபமலான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு உள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

முகேஷ் அம்பானி உடன் சித்தி விநாயகர் கோவிலுக்கு அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் வந்திருந்தார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஆகாஷ் அம்பானியும், முகேஷ் அம்பானியும் இணைந்து நிர்வாகம் செய்து வருகின்றனர், டெலிகாம் தான் அடுத்த எண்ணெய் வர்த்தகமாக பார்க்கும் முகேஷ் அம்பானிக்கு டெலிகாம் வர்த்தக வளர்ச்சிக்கு ஆகாஷ் அம்பானி முக்கிய காரணமாக உள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு 1957 ஆம் ஆண்டு 19 ஏப்ரல் அன்று யெமன் நாட்டில் திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முகேஷ் அம்பானிக்கு இன்று 66 வயதாகிறது. கோடீஸ்வர தொழிலதிபரின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில் மாலையில் விநாயக பெருமானின் அருளும் கிடைத்துள்ளது. பெரிய தொழிலதிபர்கள் முதல் நடிகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்புகிறார்கள்.
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல், ரீடைல் மற்றும் டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மதிப்புடைய தனியார் நிறுவனமாகும்.

உலகின் 13வது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் 66வது பிறந்த நாளில் அவருடைய சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலராக உள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கும் பேர் போனவர்
முகேஷ் அம்பானியிடன் இருக்கும் ஆடம்பர பொருட்களை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீடான அண்டிலியா-வின் மதிப்பு ரூ.15,000 கோடி, அண்டிலியா 27 மாடிகளை கொண்ட பிரம்மான்ட வீடாகும். அண்டிலியா வீட்டில் ஹெலிபேட், ஹெல்த் கிளப், ஜிம், சினிமா தியேட்டர், ஐஸ்கிரீம் பார்லர், கோவில் என இல்லாத வசதிகளே இல்லை.
2021ல் 79 மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டன் நாட்டில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ வாங்கினார். இது 300 ஏக்கர் பரப்பளவில், 27 கோல்ப் மைதானம், 13 டென்னிஸ் கோட், 3 உணவகம், 49 அறைகள், நீச்சல் குளம் என பல ஆடம்பர வசதிகள் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் காஸ்ட்லியான ஐபிஎல் டீம்களில் ஒன்றாகும்- 119.9 மில்லியன் டாலருக்கு முகேஷ் அம்பானி வாங்கினார். ஹம்லேஸ் - லண்டனில் புகழ்பெற்ற பொம்மை கடைகளில் ஒன்று - சுமார் ரூ.620 கோடி மதிப்புடையது. இது 259 ஆண்டு பழமையான ஒரு பிரிட்டீஸ் நிறுவனம்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான போயிங் பிசினஸ் ஜெட் 2 மதிப்பு $73 மில்லியன். ஏர்பஸ் ஏ319 - ரூ.240 கோடி மதிப்பிலான ஏர்பஸ்களை கொண்டது, தி பால்கான் 900 இஎக்ஸ் - பல சொகுசு அம்சங்களை கொண்ட இதன் மதிப்பு ரூ.33 கோடி.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications