போர்ப்ஸ் இந்தியா இதழின் 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 92 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 805 கோடி ஆகும்.

முகேஷ் அம்பானி விலை உயர்ந்த வீடுகள், சொகுசு கார்கள் போன்ற வசதிவாய்ப்புடன் ராஜவாழ்க்கை வாழ்கிறார். அவரது அன்டீலியா வீடு மட்டும் ரூ.15,000 கோடி மதிப்பாகும்.
சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியின் மன்ஹாட்டன் வெஸ்ட் வில்லேஜில் இருந்த ஆடம்பரமான தனது அப்பார்ட்மென்ட்டை முகேஷ் அம்பானி 9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.74.5 கோடி ஆகும்.

இருப்பினும் 66 வயதான இந்த பணக்கார தொழிலதிபருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, துபாயில் ஆடம்பரமான சொத்துகள் உள்ளன. இதில் 4 குறிப்பிடத்தக்க சொத்து பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் பார்க்:
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் பார்க் கன்ட்ரி கிளப்பை 2021 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி வாங்கினார். 900 ஆண்டுகாலம் பழமையான இந்த சொத்து 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 49 பெட்ரூம்கள், 27 கோல்ப் மைதானங்கள், 13 டென்னிஸ் விளையாட்டு மைதானங்கள், 14 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்கள் அமைந்துள்ளன.

இந்த இடத்தில் ஜேம்ஸ்பாண்டு படங்களான கோல்டு பிங்கர்(1964), டுமாரோ நெவர் டைஸ்(1997) ஆகிய படங்களின் சூட்டிங் நடைபெற்றது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.592 கோடி ஆகும்.
மண்டாரின் ஓரியண்டல் ஹோட்டல், நியூயார்க்: ஸ்டோக் பார்க்கை வாங்கிய பின்னர் நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள மண்டாரின் ஓரியண்டல் ஹோட்டலை முகேஷ் அம்பானி வாங்கினார். இதன் விலை 98.15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.813 கோடி. இருப்பினும் இந்த சொத்தை வாங்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.2000 கோடி அளித்தது. இதில் ஹோட்டல் பேரில் இருந்த கடன் ரூ.955 கோடியும் அடங்கும்.

நியூயார்க்கின் கொலம்பஸ் சர்க்கிளில் உள்ள டாய்ச் பேங்க் சென்டரில் மண்டாரின் ஓரியண்டல் ஹோட்டல் அமைந்துள்ளது. 5 ஸ்டார் ஹோட்டலான இங்கு ஹாலிவுட்டின் திரைப்படப் பிரபலங்கள் மற்றும் பில்லியனர்கள் ஏராளமானவர்கள் வந்து தங்கியிருப்பர். 248 விசாலமான அறைகள் மற்றும் பல சொகுசு வசதிகள் இந்த ஹோட்டலில் உள்ளது. இதில் 14,500 சதுர அடியில் ஸ்பா, ஃபிட்னஸ் சென்டர் உள்ளது.
பாம் ஜுமைராவில் பீச் வில்லா: துபாயில் உள்ள பாம் ஜுமைராவில் 3000 சதுர அடி மேன்ஷனை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.640 கோடி ஆகும். இந்த மேன்ஷன் அவரது மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கியதாகும். இதில் 70 மீட்டர் நீள பிரைவேட் பீச் உள்ளது.
பாம் ஜுமைராவில் சொகுசு வில்லா: துபாயில் அதிக விலையுள்ள குடியிருப்பை வாங்கி தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற முகேஷ் அம்பானி அடுத்த சில வாரங்கள் கழித்து அதைவிட அதிக விலையிலான ஒரு சொகுசு வில்லாவை பாம் ஜுமைரா பீச்சில் வாங்கினார். இதன் மதிப்பு ரூ.1,350 கோடி. இந்த சொத்தை அவர் குவைத் தொழிலதிபர் முகமது அல்ஷாயாவிடமிருந்து வாங்கியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications