இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. 96.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்போடு இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 18ஆவது நபராகவும் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி குழுமம் இந்தியாவில் கால் பதிக்காத துறையே இல்லை என கூறலாம்.
டெலிகாம், பெட்ரோ கெமிக்கல், பேஷன், ரீடைல் என அனைத்து துறைகளிலுமே ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்து வெற்றியும் பெற்று இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் ஆகவும் ரிலையன்ஸ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் தலைவராக செயல்படக்கூடிய முகேஷ் அம்பானியின் மும்பை இல்லம் எப்போதுமே செய்திகளில் இடம் பிடிக்கக் கூடியது.

ஏனெனில் அது ஒரு வீடு கிடையாது ஒரு மினி நகரம் என அழைக்கும் அளவிற்கு ஒரு வீட்டிற்குள்ளேயே பல்வேறு வசதிகள் நிறைந்ததாகவும் மும்பையின் அடையாளமாகவும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான Antilia (ஆண்டிலியா) இல்லம் எப்போதுமே நம்மை பிரமிக்க வைக்கிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகிய இருவரும் இணைந்து வடிவமைத்து கட்டிய ஆண்டிலியா இல்லம் மொத்தம் 27 அடுக்குகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு.
அதன் நவீன கட்டமைப்பு அதில் இருக்கக்கூடிய ஆடம்பர வசதிகள் கேட்போரை அதிசயிக்க வைக்கும். மும்பை நகரின் அடையாளமாக திகழக்கூடிய ஆண்டிலியாவில் உடற்பயிற்சி மையம், தியேட்டர், நீச்சல் குளம், கோயில், ஹெலிகாப்டர்கள் வந்து இறங்க ஏதுவாக ஹெலிபேட்கள், 150 க்கும் அதிகமான கார்களை நிறுத்தும் அளவிற்கு இடம் என ஏராளமான வசதிகள் இருக்கின்றன.
கடந்த 2006 ஆம் ஆண்டில் தான் இந்த குடியிருப்பையை கட்டும் பணி தொடங்கியது 2010 ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தில் தூய்மை பணி , சமையல் வேலை, தோட்ட வேலை, பாதுகாப்பு வேலை என நூற்றுக்கணக்கானவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அத்தனை எளிதாக யாரும் இந்த வீட்டினுள் நுழைந்து விட முடியாது. மும்பையின் அடையாளமாக இருக்கக்கூடிய ஆண்டிலியா இல்லம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின்சார கட்டணம் செலுத்துகிறது என்பதை கேட்டால் நமக்கெல்லாம் தலையே சுற்றிவிடும்.
நம்முடைய வாழ்நாள் சம்பளம் கூட இவ்வளவு இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. முகேஷ் அம்பானி வீட்டில் ஒரு மாதத்திற்கு 6,37,260 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தபடுகிறதாம். அதாவது ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிடும் தகவலின் படி சராசரியாக இவர்கள் கிட்டத்தட்ட 70 லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை மின்சார கட்டணமாக செலுத்துகிறார்கள். பிஎம்டபிள்யூ போன்ற ஒரு ஆடம்பர காரின் விலையை இவர்கள் மாதம் தோறும் மின்சார கட்டணமாக செலுத்துகிறார்கள்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications