முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ பாரத் 4ஜி ஃபோன்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. தீபாவளி தமாகா சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம், இந்த 4ஜி போன்களை 999 ரூபாயிலிருந்து 699 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. இது மொபைல் அனுபவத்தை மேம்படுத்த விரும்புவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த குறிப்பிட்ட கால சலுகை பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிப்பதற்காக ஜியோவின் முயற்சியாகும். இந்த விலை குறைப்பு நிரந்தரமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்த பிறகு ஜியோ பாரத் 4ஜி ஃபோன்கள் அவற்றின் நிலையான விலையான ரூ.999-க்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு தீபாவளி ஆஃபர் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தடையின்றி பேசுவதை உறுதி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்பானி தலைமையிலான நிறுவனம் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

ஜியோ பாரத் 4ஜி போன்களுக்கான மாதாந்திர திட்டம் ரூ.123 ஆகும். இது மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மலிவான திட்டங்களை விட மாதத்திற்கு ரூ.76 சேமிக்க உதவுகிறது. இதன் மூலம் வெறும் 9 மாதங்களில் போனின் விலை மீட்கப்பட்டு, போன் இலவசமாக கிடைக்கும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி, மாதத்திற்கு 14GB டேட்டா, 455-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், லைவ் விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் ஜியோ பே மூலம் UPI சேவைகள் உள்ளிட்ட பல பலன்கள் கிடைக்கும்.
இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-இல் ஜியோ பாரத் V3 மற்றும் ஜியோ பாரத் V4 போன்ற 4ஜி போன்களை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜியோ பாரத் 4ஜி ஃபோன்கள் ரூ. 1,099 என்ற விலையிலிருந்து தொடங்குகின்றன. இது ரூ.123 திட்டத்தில் பல நன்மைகளை வழங்குகின்றன, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி, மாதத்திற்கு 14GB டேட்டா கிடைக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, இந்த வார தொடக்கத்தில் மும்பையில் நடந்த என்விடியா AI சம்மிட்டில் என்விடியாவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங்குடன் பேசினார். ரிலையன்ஸ் மேற்கொண்டுள்ள திட்டங்களை மேற்கோள் காட்டி, இந்தியாவில் AI துறையில் ரிலையன்ஸ் மேற்கொண்ட திட்டங்களைப் பற்றி அம்பானி பேசினார். இந்தியாவில் AI உள்கட்டமைப்பை உருவாக்க என்விடியாவுடன் இணைந்து செயல்படுவது அவற்றில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications