இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் கையாளாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். இந்தியாவில் உள்ள மதிப்பு மிக்க டாப் 500 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ஒன்றாகும். மிகப் பெரிய தனியார் நிறுவனமாகவும் உள்ளது.
ரிபைனரி, எனர்ஜி, பெட்ரோகெமிக்கல்ஸ், தகவல்தொடர்பு உள்பட பல்வேறு தொழில்களில் மிக லாபகரமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயங்கி வருகிறது. அதன் துணை நிறுவனமாக கடந்த ஆண்டு ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் தொடங்கப்பட்டது.

முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் பிளாக் ராக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மியூச்சுவல் பண்டு லைசென்ஸுக்கு விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் தற்போது செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவான செபியின் பரிசீலனையில் உள்ளது.
இந்தியாவின் ரூ.1,75,9000 கோடி மதிப்புமிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து 2023 ஆகஸ்ட் மாதத்தில் பிரித்து உருவாக்கப்பட்ட ஜியோ பைனான்சியல் சர்வீஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ், ரிலையன்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன், ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவை ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் கீழ் சேவை வழங்கப்பட உள்ளன.
இப்போது பிளாக்ராக் நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் கூட்டு பிசினஸ்ஸை தொடங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் தலா ரூ.1200 கோடியை முதலீடு செய்துள்ளன. 2022 ஆம் ஆண்டின்படி பிளாக்ராக்கின் சொத்து மதிப்பு மொத்தம் 8.2 டிரில்லியன் ஆகும்.
ரூ.50 லட்சம் கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு துறையில் முகேஷ் அம்பானி ஆதரவுள்ள மியூச்சுவல் பண்டுகளில் டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் அணுகுமுறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது தவிர ஜியோ பைனான்ஸ்சியல் சர்வீஸஸ் அதன் கிரெடிட் ரேட்டிங் மற்றும் பிற அத்தியாவசிய அனுமதிகளைப் பெறும் முயற்சியில் இருக்கிறது.
அண்மையில் ஈஷா அம்பானி, அன்ஷுமன் தாக்குர், ஹிதேஷ் குமார் ஆகியோரை அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆக்குவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியிருந்தது. வருடாந்திர ஜெனரல் பாடி மீட்டிங்கில் பேசிய முகேஷ் அம்பானி ஜியோ பைனான்சியல் சர்வீஸஸை ரூ.1,20,000 கோடி நிகர மதிப்புடன் மூலதனமாக்கியதாகவும் இந்த நிறுவனத்தை உலகின் மிக உயர்ந்த மூலதன நிதிச்சேவை தளங்களில் ஒன்றாக உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications