நாட்டில் ஏற்கனவே பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வாய்ப்புகள் உள்ள நிலையில், அவற்றை மக்களுக்கு வழங்கும் நோக்கில் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு களம் காண்கின்றன. அந்த வகையில், முகேஷ் அம்பானியின் நிறுவனமும், வெளிநாட்டு நிறுவன கூட்டணியில் இணைந்து சாமானிய மக்களும் தங்கள் செல்வத்தை விரைவாக அதிகரிக்க ரிலைய ன்ஸ் ஜியோவின் புதிய முயற்சியான மியூச்சுவல் ஃபண்டிற்கு தற்போது செபியின் ஒப்புதல் வழங்கியுள்ளது
ஜியோ நிதிச் சேவைகள் என்பது இந்திய நிதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னணி தொழில்துறைத் தலைவரான முகேஷ் அம்பானிக்கு இதுவும் ஒரு சக்சஸ் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். தற்போது பல ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் வலுவாக இருக்கும் எஸ்பிஐ மற்றும் ஐசிஎஸ்ஐசிஐ வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஜியோவும் களமிறங்க காத்துள்ளது. இதனால் வரும் காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கடுமையான போட்டி இருக்கும்

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆனது கடந்த ஜூலை 2023 இல் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து பிரிக்கப்பட்டது. தற்போது இந்த வங்கி சாரா நிதி நிறுவனம் கடன் வழங்குதல், டிஜிட்டல் எக்யூப்மெண்ட் குத்தகை, நிதி, காப்பீட்டு தரகு மற்றும் பணம் செலுத்தும் சேவைகளில் கவனம் செலுத்துகிறது. இதற்கிடையில், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் நுழைய உள்ளது.
உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக்கின் கூட்டணியை ஜியோ ஃபைனான்சியல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான செபியும் (SEBI) இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த 50:50 கூட்டு முயற்சியாகும். இது இந்திய சந்தைக்கு ஏற்ப புதுமையான முதலீட்டு தீர்வுகளை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அம்பானியின் இந்த புதிய முயற்சியில், இந்தியாவில் குறைந்த வருமானம் உள்ளவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவரும் இதன் மூலம் பலனடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பானியின் இந்த புதிய முயற்சியின் செயல்பாடுகள் பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்டவர்களையே இலக்காகக் கொண்டவை என்றும், இதனால், அனைவரும் விரைவாக பணம் சம்பாதிக்க ஒரு புதிய வழி கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் ஏற்பட்டுள்ள சரிவு, உலக முதலீட்டாளர்களின் விற்பனை ஆகியவற்றிற்கு இடையில், செபி அம்பானியின் இந்த புதிய முயற்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது அம்பானியின் நிறுவனங்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம்.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ஏற்கனவே ஃபின்டெக் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக மாறியுள்ளது. இந்தியாவின் பெரிய சில்லறை கடன் மற்றும் பணம் செலுத்தும் சந்தையில் இருந்து நிறுவனம் பயனடைந்து வருகிறது. எனவே, இந்த புதிய மியூச்சுவல் ஃபண்ட் முயற்சியானது ரிலையன்ஸின் டிஜிட்டல் மற்றும் சில்லறை வணிகங்களை மேலும் வலுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஏற்ற இறக்கமான சந்தைகளிலும் கூட ஜியோ நிதிச் சேவைகள் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. இவை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். 100 நாட்களுக்கும் மேலாக இந்த பங்கு ரூ.320 முதல் ரூ.370 வரை வர்த்தகமாகி வருகிறது. தற்போது சற்று பின்னடைவை சந்தித்தாலும் இந்த ஆண்டு 44 சதவீதம் உயர்ந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது இந்த பங்குக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications