நாட்டின் ஒவ்வொருவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டோம். எனவே அதிவேக இண்டர்நெட் தேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். தற்போது 5ஆம் தலைமுறை நெட்வோர்க் ஆன 5ஜி-ஐ நாம் அனைவரும் கிட்டத்தட்ட பயன்படுத்தி வருகிறோம். 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி-ஐ தாண்டி நாம் தற்போது 5ஜி-ஐ பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஆனது அதன் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதாகவும், அதன் வேகத்தை அதிகப்படுத்த 5.5ஜியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. அதன் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டில் டோக்கியோவில் முதல் தலைமுறை நெட்வோர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் அலைபேசி அழைப்புகளில் மோசமான குவாலிட்டியை கொண்டிருக்கும். அதை தொடர்ந்து 2ஜி என்ற 2ஆம் தலைமுறை நெட்வோர்க் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சற்று அழைப்புகள், மேம்பட்ட ஒலி தரம் மற்றும் தரவு பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் தலைமுறை 2ஜி தான்.
தொடர்ந்து 2001 ஆம் ஆண்டில் 3ஜி பயன்படுத்தப்பட்டது. இது 2ஜியின் நான்கு மடங்கு தரவு பரிமாற்ற திறன்களைக் கொண்டிருந்தது. அதை தொடர்ந்துதான் 2012-ல் 4ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன். இது 3ஜியை காட்டிலும் 10 மடங்கு வேகம் அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஜியோ அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக 2019 5ஜி சேவை வழங்கும் முதல் நாடாக தென் கொரியா இருந்தது. 5ஜி என்பது சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பமாகும். இது ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் அல்ட்ரா-ஹை-டெபினிஷன் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற மேம்பட்ட பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5ஜி என்பது IoT தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாகவும் உள்ளது, இது ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தொழில்துறை IoT போன்ற பல்வேறு பயன்பாடுகளை கொண்டிருக்கும்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, அதன் மேம்பட்ட 5.5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி, 10ஜிபிபிஎஸ் வரை அதிவேக இணைய வேகத்தை வழங்குவதாக கூறியுள்ளது. இது ஜியோவின் தற்போதைய 5ஜி சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் குறிக்கிறது. பயனர்களுக்கு மேம்பட்ட இணைப்பு மற்றும் சிறந்த நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது.
ஜியோவின் 5.5ஜி நெட்வொர்க் அதன் 5ஜி சேவையின் மேம்பட்ட பதிப்பாகும். இது தற்போதைய 5ஜி உடன் ஒப்பிடும்போது வேகமான இணைய வேகம், குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த நுண்ணறிவு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரே நேரத்தில் பல டவர்களுடன் இணைக்கக்கூடிய மூன்று வெவ்வேறு நெட்வொர்க் செல்களைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, பயனர்கள் 10Gbps வரை பதிவிறக்க வேகத்தையும், 1Gbps வரை பதிவேற்ற வேகத்தையும் அனுபவிக்க முடியும்.
ஜியோவுடன் இணைந்து தொடங்கப்பட்ட OnePlus 13 தொடர், ஜியோவின் 5.5G சேவைகளை முதலில் ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜியோவின் மேம்பட்ட நெட்வொர்க் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, அவை 5.5G உடன் இணக்கமாக இருக்கும்.
OnePlus 13 சிரீஸ் லான்சின்போது, ஜியோ 5.5G சேவையை வேகத்தை அனுபவித்தது. அதில், குறிப்பிடத்தக்க பதிவிறக்க வேகத்தை அடைந்தது. ஜியோவின் 3சிசி அல்லாத கூறு கேரியரில், டவுன்லிங்க் வேகம் 277.78 எம்பிபிஎஸ்ஐ எட்டியது. அதே சமயம் 3சிசி கேரியரில், பதிவிறக்க வேகம் 1,014.86 எம்பிபிஎஸ் ஆக உயர்ந்தது.
5.5G சேவை எப்படி வேலை செய்யும்: இது நிலையான 5G ஐ விட குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்குகிறது.
அதிக வேகம்: பதிவிறக்கங்களுக்கு 10Gbps மற்றும் பதிவேற்றங்களுக்கு 1Gbps வரை இருக்கும்.
குறைந்த தாமதம்: வேகமான இணைப்பை உறுதி செய்தல்.
பல இணைப்புகள்: பல டவர்களுக்கான ஒரே நேரத்தில் இணைப்புகள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைப்பை வழங்கும்.
ஜியோவின் 5.5G தொழில்நுட்பம் பயனர்களுக்கான இணைய அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் ஆன்லைனில் வேலை செய்வது போன்ற பணிகளை வேகமாகவும் தடையின்றியும் செய்யும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications