இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி எவ்வளவு பிசியாக இருந்தாலும் லேட்டஸ்ட் கார்களை மிஸ் செய்யாமல் வாங்குவதில் அவரை முந்த ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். முகேஷ் அம்பானியின் கார் கலெக்ஷன்-க்காக அவருடைய ஆடம்பர வீட்டில் பல அடுக்குகளுக்கு கார் பார்க்கிங் மட்டுமே உள்ளது.
முகேஷ் அம்பானி மட்டும் தான் இப்படியா என்றால் ஒட்டுமொத்த குடும்பமும் புதிய கார்கள் மீது தீரா காதல் கொண்டு உள்ளது. ஆகாஷ் அம்பானி, நீதா அம்பானி, அனந்த் அம்பானி என அனைவரும் லேட்டஸ்ட் கார்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனக்கு விருப்பமான வகையில் கஸ்டமைஸ் செய்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) கார்-ஐ வாங்கினார். இந்த காரின் விலை என்னவோ இந்தியாவில் 6.8 கோடி ரூபாய் தான். ஆனால் முகேஷ் அம்பானி கூறிய customisations மூலம் அவர் வாங்கிய காரின் விலை 13.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி தனது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை யாரிடமும் இல்லாத நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பெயரில் வாங்கியுள்ளார். இதற்காக மிகவும் ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட Tuscan Sun நிறத்தில் பெயின்டிங் செய்யப்பட்ட காருக்கு ஆர்டர் செய்துள்ளார்.
முகேஷ் அம்பானி-க்கு விருப்பமான Tuscan Sun நிறத்தில் பெயின்டிங் செய்ய மட்டுமே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இதோடு காரின் உட்புறத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதன் மூலம் இதன் விலை 13.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த காருக்கு ஸ்பெஷலாக முகேஷ் அம்பானி 0001 என்ற விஐபி நம்பரை வாங்கியுள்ளார். இதற்காக மட்டுமே 12 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் என தெரிகிறது. முகேஷ் அம்பானியின் பல மாடி கார் கராஜ்-ல் Rolls-Royce Cullinan கார் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்றால் மிகையில்லை.


Click it and Unblock the Notifications