இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, பிரபல தொழில் அதிபர் வீரென் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சி குஜராத்தின் ஜாம்நகரில் இன்று இறுதி நாள் கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஜாம்நகர் மக்களுக்கான அன்னதானம் உடன் துவங்கிய திருமண வைபோகங்கள் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முகேஷ் அம்பானியும், ஆனந்த் அம்பானியும் கிராம மக்களுக்கு தங்கள் கைகளால் உணவுகளைப் பரிமாறினர்.

இதனிடையில் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முக்கிய விருந்தினர்கள் ஜாம்நகருக்கு தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றனர். பில் கேட்ஸ்-ல் துவங்கி, தல தோனி முதல், பாலிவுட் நட்சத்திரங்கள் வரையில் அனைத்து துறையிலும் முக்கிய அதிகாரிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் முகேஷ் அம்பானியின் மருமகன் விக்ரம், மருமகள் இஷேதாவும் வந்துள்ளனர். இருவரும் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரி தீப்தி சல்கோகரின் பிள்ளைகள் ஆவார். தத்தாராஜ் சல்கோகர் என்ற தொழிலதிபரை தீப்தி திருமணம் செய்துள்ளார்.
விக்ரம் சல்கோகர், ஆனந்த், ஆகாஷ் அம்பானியின் மூத்த மச்சான் ஆவார்.
திருபாய் அம்பானியின் பேரப்பிள்ளை விக்ரம் சல்கோகர். அவரது தந்தை தத்தாராஜ் சல்கோகர் விஎம் சல்கோகர் குரூப் ஆப் கம்பெனியின் உரிமையாளர். இந்த நிறுவனம் இரும்புத் தாது, நிலக்கரி, காற்றலைகள் போன்ற துறைகளில் தொழில் செய்து வருகிறது.
2007 ஆம் ஆண்டில் மெக்கின்ஸி அண்டு கம்பெனியில் விக்ரம் தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார். இப்போது அவர் விஎம் சல்கோகர் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டைரக்டராக உள்ளார்.
விக்ரமின் சகோதரி இஷெதாவும் அவரது தாயார் போலவே பொதுவாக வெளியிடங்களுக்குச் செல்வதில்லை. இஷெதா இப்போது சல்கோகர் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டில் துணைத் தலைவராக உள்ளார்.
அவர் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் படித்தார். இஷெதாவின் தாயார் தீப்தி சல்கோகர் திருபாய் அம்பானியின் இளைய மகள் ஆவார். இஷெதா பல அறச்செயல்களுக்காகப் பெயர் பெற்றவர்
திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1-ம் தேதி தொடங்கியது.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் இருவரும் ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர்.
Story Written by : Jayachandran


Click it and Unblock the Notifications