பண நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா, தனது பொருளாதார வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்க இந்திய பில்லியனர் முகேஷ் அம்பானியின் ஆதரவை நாடியுள்ளது. சம்மாவே அம்பானி சந்தையில் ஆதிக்க நிலையை அடைய அதிரடியாகச் செயல்படுவார். இப்படியிருக்கும் போது வந்த வாய்ப்பை விடுவாரா என்ன..?
முகேஷ் அம்பானியின் டெலிகாம் நிறுவனமான ஜியோ கானா நாட்டில் உயர் வேக பிராண்ட்பேன்ட் நெட்வொர்க் சேவை வழங்க களத்தில் இறங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிரிக்காவில் மாபெரும் வர்த்தகத்தை கொண்டிருக்கும் வேளையில், ஜியோ மாபெரும் திட்டத்துடன் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ரா கோ. (NGIC) என்ற நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது முதல் 5G நெட்வொர்க்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட்டின் வெற்றியை கானா-விலும் கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இந்த நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ரா கோ. (NGIC) ரிலையன்ஸ்-ன் கிளை நிறுவனமான Radisys முதலீட்டில் இயங்கி வருகிறது.
மலிவு விலையில் டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால் வழங்கிய ஜியோவின் அதிரடி துவக்கம் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை செய்ததது. இந்த புரட்சி 2016 பல லட்சம் இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டாவை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இதே மாடலில் தான் தற்போது நெக்ஸ்ட்-ஜென் இன்ஃப்ரா கோ. (NGIC) இயங்க உள்ளது.
கானா அரசாங்கம், இதேபோன்ற குறைந்த விலை, உயர் வேக இணைய சேவை பொருளாதார வளர்ச்சியையும் மேம்பாட்டையும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு இணைய சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், அந்நாட்டு அரசு வணிக நடவடிக்கைகளை அதிகரித்து தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கிறது.
5G நெட்வொர்க்கின் அறிமுகம், கானாவின் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து, அதன் கடன் நெருக்கடியிலிருந்து மீளுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம், கானா நாட்டின் ஜனாதிபதி நானா அக்குபோ-அடோ, நாட்டின் GDP க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) மலிவான கடன்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், கானா அதன் பொருளாதார சாத்தியத்தை வெளிப்படுத்தி செழிக்கும் நாடாக உருவாக வேண்டும் என்று நம்புகிறது.


Click it and Unblock the Notifications