திருபாய் அம்பானி மறைவிற்கு பின்பு வெறும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை மட்டும் பெற்ற முகேஷ் அம்பானி, நிதி சேவை - டெலிகாம் என பல முக்கிய நுகர்வோர் அடிப்படையாக கொண்ட வர்த்தகத்தை அனில் அம்பானி பெற்றார். அனில் அம்பானி தலைமையிலான நிறுவனம் தற்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து புது புது வர்த்தகத்தை துவங்கி சந்தையை அதிர வைத்து வருகிறார்.
சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தமிழ்நாட்டின் உதயம் பருப்பு நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது, இதை தொடர்ந்து நாட்டின் பழைய பிராண்டுகளை மீட்டு எடுக்கும் முயற்சியில் SIL பிராண்டை கைப்பற்றிய நிலையில் இந்த வார துவக்கத்தில் இதை ரீபிராண்டிங் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீண்டும் ஒரு துறையில் புரட்சியை உருவாக்க முடிவு செய்துள்ளது. மருத்துவ துறையில், மருத்து பரிசோதனை பிரிவு மிகப்பெரிய வர்த்தக சந்தையை கொண்டு உள்ளது. இதை கண்டறிந்து பல வருடங்களுக்கு முன்பே இதற்காக காய்களை நகர்த்தி வைத்தார் முகேஷ் அம்பானி.
இதன் விளைவாக இந்திய மக்களுக்கு ஜீனோம் டெஸ்ட்களை (genomic tests) வெறும் ரூ.1,000க்குள் வழங்க திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ். தற்போது சந்தையில் இத்தகைய genomic tests-களின் அடிப்படை விலை ரூ.10,000 அளவில் உள்ளது. ஆனால் ரிலையன்ஸ் இந்த பரிசோதனைக்கான விலையை பத்து மடங்கு குறைக்க முடிவு செய்துள்ளது. 2016இல் ஜியோ மூலம் டெலிகாம் துறையை மாற்றியது போல, இப்போது ஜீனோம் டெஸ்ட் சந்தையை ரிலையன்ஸ் மாற்ற உள்ளது. இது சுகாதார துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரிலையன்ஸ் இந்த புதிய முயற்சிக்கு பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்ஸஸ் (Strand Life Sciences) நிறுவனத்தை பயன்படுத்துகிறது. 2021இல் ரூ.393 கோடிக்கு ரிலையன்ஸ் இந்த நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ராண்ட் நிறுவனம் ஜீனோம் சையின்ஸ் மற்றும் சிறப்பு ஹெல்த்டயாக்னாஸ்டிக்ஸ் துறையில் நிபுணத்துவம் கொண்டது.
இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் ஜீனோம் டெஸ்ட்களை மலிவு விலையில் வழங்க உள்ளது. இது இந்தியாவில் ஜீனோம் டெஸ்ட்களை பொதுமக்களுக்கு அணுகக்கூடியதாக்க மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீனோம் டெஸ்ட் என்றால் என்ன? ஏன் முக்கியம்?
ஜீனோம் டெஸ்ட் ரத்தம், உமிழ்நீர் அல்லது உடல் திசுக்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இது ஒருவரின் உடலில் நோய் வரும் ஆபத்து, புற்றுநோய் வளர்ச்சி, தனிப்பட்ட சிகிச்சை திட்டம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது.
மரபணு, புரதம், குரோமோசோம் போன்றவை ஒருவரின் உடல் நலத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியப்படும். இது தனிப்பட்ட மருத்துவத்துக்கு (personalised medicine) அடித்தளமாக விளங்குகிறது. தற்போது இது விலை உயர்ந்தது என்பதால் அதிகப்படியான மக்கள் இதை பயன்படுத்த முடியவில்லை. இதன் விலை குறையும் பட்சத்தில் பல கோடி மக்கள் இதை பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.
ரிலையன்ஸ் என்டரி எப்போதும் அதிரடி தான்
2016இல் ஜியோ அறிமுகமானபோது, இந்தியாவில் அப்போது பயன்பாட்டில் இல்லாத 4ஜி சேவை கொண்டு அறிமுகமானது. ஜியோவின் என்டரி டெலிகாம் துறையில் அழைப்பு கட்டணம், இன்டர்நெட் விலை பெரிதும் குறைந்தது. இதனால் மொபைல் பயன்பாடு அளவும், இன்டர்நெட் பயன்பாட்டு அளவும் இந்தியாவில் அதிகரித்து, இப்போது ஐபிஓ வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது ஜியோ.
அதேபோல ரிலையன்ஸ் இப்போது ஜீனோம் டெஸ்ட்களை மலிவு விலையில் வழங்கி சுகாதார துறையை மாற்ற உள்ளது. இது பொதுமக்களிடயே இத்தகைய பரிசோதனைக்கான விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில் இத்துறையில் இறங்கியுள்ளது ரிலையன்ஸ்.
ஏற்கனவே மும்பையில் ரிலையன்ஸ் பவுன்டேஷன் வாயிலாக மருத்துவமனையை நிர்வாகம் செய்து வருகிறது. இதனால் முகேஷ் அம்பானிக்கு மருத்துவ துறை என்பது புதியது கிடையாது. ரிலையன்ஸின் இந்த முயற்சி இந்திய சுகாதார துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications