இந்தியாவின் பெரும் பணக்காராக இருக்கும் முகேஷ் அம்பானி டெலிகாம், ரீடைல் ஆகியவற்றில் அதிகப்படியான கவனம் செலுத்தாலும் தனது ஆஸ்தான எண்ணெய் வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளார். காரணம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு லைப்லைன் என்றால் அது எண்ணெய் வர்த்தகம் தான், இந்த நிலையில் இப்பிரிவை விரிவாக்கம் செய்யவும் மேம்படுத்தவும் Castrol வர்த்தகத்தை மொத்தமாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் நுகர்வு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என வளைகுடா நாடுகள் ஒருப்பக்கம் புலம்பி வரும் வேளையில் முகேஷ் அம்பானியின் இந்த முயற்சி கச்சா எண்ணெய் சந்தையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் (பிபி) நிறுவனத்திற்கு சொந்தமான காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் வணிகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக விருப்பங்களையும், தொகையும் சந்தையில் இருந்து பெற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் வேளையில் ஆட்டோமொபைல் துறைக்கான லூப்ரிகண்ட் வர்த்தகமும் பாதிக்க துவங்கியுள்ளது. இதை உணர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் பல்வேறு வர்த்தகத்தை விற்பனை செய்யும் முயற்சியில் தற்போது காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் வணிகத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த பிரிவை வாங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மெண்ட், லோன் ஸ்டார் ஃபண்ட்ஸ் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ ஆகியவை இதை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புரூக்ஃபீல்டு அசெட் மேனேஜ்மெண்ட் மற்றும் ஸ்டோன்பீக் பார்ட்னர்ஸ் போன்ற முதலீட்டு நிறுவனங்களுக்கும் பிபி நிறுவனம் காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் வணிகம் குறித்த ஆரம்பக்கட்ட தகவல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இப்பிரிவு விற்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, அதேநேரத்தில் சந்தையில் இதன் மதிப்பு அடிப்படையில் விற்பனை செய்யப்படுமா அல்லது முடிவில் இருந்து பின்வாங்குமா என்பதை தீர்மானிக்கப்படும்.
காஸ்ட்ரோல் வணிகத்தின் மதிப்பு 8 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என தெரிகிறது. காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் வணிகத்தை விற்பனை தொடர்பான பேச்சுக்கள் அனைத்தும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.
காஸ்ட்ரோல் லூப்ரிகண்ட் பிரிவின் விற்பனையில் இருக்கும் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்ராள் இந்த வணிகத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு வங்கி தரப்பில் இருந்து சுமார் 4 பில்லியன் டாலர் வரையில் கடன் வழங்க தயாராக உள்ளனர்.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் முதல் முதலீட்டு நிறுவனங்கள் வரையில் காஸ்ட்ரோல் வர்த்தகத்தை வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த 4 பில்லியன் டாலர் கடன் மூலம் உயர்ந்த மதிப்பை காஸ்ட்ரோல் இது பிரிட்டிஷ் பெட்ரோலியம்-க்கு ஜாக்பாட் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய போட்டியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெற்றி பெறுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications