இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்குவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத.
இந்தியாவில் வளர்ந்து வரும் சிப் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதன் விநியோகச் சங்கிலித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டும், இதன் மூலம் அதிகப்படியான வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வருவாய் பெறும் இலக்குடன் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் போல் அதனை இறக்குமதி செய்து தான் பூர்த்தி செய்யதாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் இதை கட்டுப்படுத்த இந்தியாவிலேயே செமிகண்டக்டர் எகோசிஸ்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு மத்திய அரசு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகிறது.
இத்துறை முயற்சியில் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் இறங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் எவ்விதமான பெரிய முன்னேற்றங்களும் இல்லை, பல மாநில அரசுகள் பல நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்தாலும் பெரிய அளவிலான நம்பிக்கை இத்துறையில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இந்திய அரசு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுத்தை இத்துறையில் இறங்குவதற்காக ஊக்குவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கூட்டணிக்காக வெளிநாட்டு சிப் தயாரிப்பாளர்கள் உடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை ரிலையன்ஸ் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு இத்துறையில் இறங்குவதற்கு நோக்கம் உள்ளது மட்டுமே தவிர இறங்க வேண்டிய காலக்கெடு எதுவுமில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் எதுவும் உறுதியில்லை.


Click it and Unblock the Notifications