சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 11 சதவிகிதம் குறைத்துள்ளது. அதாவது ஒரு வருடத்தில் சத்தமே இல்லாமல் சுமார் 42,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது அம்பானியின் குடும்பம்.
மேலும், இதே காலகட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய பணியாளர்களைச் சேர்ப்பதையும் குறைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் 171,000 பேரை பணியில் அமர்த்திய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முந்தைய ஆண்டில் 263,000 பேரை பணியில் அமர்த்தப்பட்ட எண்ணிக்கையை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைய முக்கியமான காரணமாக இந்நிறுவனம் கூறுவது, 143,000-க்கும் அதிகமான ஊழியர்கள் தன்னார்வ ஓய்வு பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் பல்வேறு துறைகளில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர். கடந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 207,000 ஊழியர்கள் இருந்த வேளையில், முந்தைய ஆண்டில் 246,000 ஊழியர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே ரீடைல் வர்த்தக துறையில், குறிப்பாகக் கடை வர்த்தகத்தில் ஊழியர் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படும் என்பதாலேயே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 1.85 பில்லியன் டாலர் நிதி திரட்டிய ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த காலாண்டில் வருவாய் 7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது சந்தை எதிர்பார்த்த 15 முதல் 20 சதவிகித வளர்ச்சியை விட 50 சதவீதம் குறைவு. மேலும், கடந்த காலாண்டில் 82 புதிய கடைகளை மட்டுமே திறந்துள்ளது. இது 2023 ஆம் நிதியாண்டில் காலாண்டிற்குச் சராசரியாக 740 கடைகள் திறந்ததை விடக் குறைவு.
இந்தியாவின் முதல் மூன்று IT சேவை நிறுவனங்களான TCS, விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றில் ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 63,750-க்கும் அதிகமான குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் ஹூரன் பார்க்ளேஸ் உடன் இணைந்து இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 ஆம் ஆண்டு பட்டியல் நேற்று வெளியானது. இதில் இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த குடும்பத்தின் மதிப்பு ரூ.25.75 லட்சம் கோடியாகும். ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அம்பானி குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications