உங்கள் மதிப்புமிக்க பொருட்களை இழக்கும் பயம் இனி வேண்டாம். ஒவ்வொருவரும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அதை பாதுகாப்பாக வைப்பதில் பெரும் பாடுபகின்றனர். குறிப்பாக, ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதும், மறதியால் தொலைந்துபோவதும் வாடிக்கையாகி உள்ளது. இதனை கண்டுபிடிப்பது என்பது எளிதான காரியமும் அல்ல. காவல் நிலையத்தில் புகார் அளித்தால் இப்போது ஒரு சில ஸ்மார்ட்போன்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுபோன்ற சிரமங்களில் இருந்து உங்களை பாதுகாக்க இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தொலைந்த பொருட்களை கண்டுபிடிக்க ஒரு டிவைஸை கண்டுபிடித்துள்ளது. அதுதான் ஜியோ டேக் கோ.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு டிராக்கர் டிவைஸ் 'ஜியோடேக் கோ'வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் டிவைஸ் கூகுளின் Find My Device உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஜியோ டேக் கோ தற்போது சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதனுடன், நிறுவனம் புதிய ஸ்மார்ட் புளூடூத் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் ப்ளூடூத் டிராக்கர் டிவைஸ் விலை ரூ.1,499 ஆகும்.

மிக விரைவாக தொலைந்து போகும், மறதியால் ஏதோ ஒரு இடத்தில் வைக்கப்படும் அடையாள அட்டைகள், சாவிகள், பணப்பைகள், பர்ஸ்கள், செல்லப்பிராணிகள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் இந்த டிவைஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ப்ளூ டூத் டிராக்கரின் உதவியுடன் இவற்றைக் கண்டறியலாம்.
ஜியோ டேக் கோ பயன்கள்: ஜியோ டேக் கோ வேலை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் சிம் கார்டு தேவையில்லை. ப்ளூடூத் 5.3 இணைப்பைப் பயன்படுத்தி டிவைஸ் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைகிறது. ஆண்ட்ராய்டு டிவைஸ்களில், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் 'ஃபைண்ட் மை டிவைஸ்' அப்ளிகேஷனுடன் டிவைஸை கண்காணிக்க முடியும். இதன்மூலம் உங்கள் டிவைஸ்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இங்குள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆப்பிள் ஏர்டேக்-ஐ போல் டிவைஸ் கண்காணிக்கிறது.
ஜியோ டேக் கோ 120 டிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. அது வெளியிடும் ஒலியைப் பயன்படுத்தி பொருட்களைக் கண்டறிய முடியும். இந்த டிவைஸின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது ஜியோ டேக் அப்ளிகேஷன் மூலம் அதிக ஒலியை வெளிப்படுத்தும். இரைச்சலான மற்றும் கண்டுபிடிக்க முடியாத பகுதிகளிலிருந்து பொருட்களைக் கண்டறிய ஸ்பீக்கர் உதவுகிறது. டிவைஸில் உள்ள டிராக்கர் ப்ளூ டூத் வரம்பிற்கு வெளியே இருந்தால், கடைசி இடத்தை கூகுளின் 'ஃபைண்ட் மை டிவைஸ்' நெட்வொர்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஜியோ டேக் கோ மாற்றக்கூடிய CR2032 பேட்டரியைக் கொண்டுள்ளது. நிறுவனம் ஒரு வருட பேட்டரி ஆயுள் இருக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் டிவைஸில் கூடுதல் பேட்டரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 9 உயர் பதிப்புகள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஜியோ டேக் வேலை செய்யும். அதே நேரத்தில், இந்த டிவைஸை ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்த முடியாது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளங்களில் ஜியோ டேக் கோ பல கலர்களில் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications