ஆட்டோமொபைல் முதல் சோலார் எனர்ஜி வரையில் பல துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் ஆர்வமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதோடு, அதிகப்படியான முதலீட்டைச் செய்ய ஆர்வமாக உள்ளது.
இந்த நிலையில்சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல் 2 மணிநேரத்தில் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த மாபெரும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் பல தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி சென்னையில் நடக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளத் தான் ஆர்வமாக இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், அதற்கு மன்னிப்பும் கேட்டு வீடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்திய வீடியோ பதிவில் முகேஷ் அம்பானி, தமிழ்நாடு எப்போதும் பாரம்பரியமும், அறிவுசார்ந்த மக்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இந்தப் புதுயுகத்தில் தமிழ்நாட்டின் வளம் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த Business Friendly மாநிலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாடு விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்ட்னராகியுள்ளதை பெருமையுடன் கூறுகிறேன். தமிழ்நாட்டில் சுமார் 25000 கோடி ரூபாய் முதலீட்டில் 1300 ரிலையன்ஸ் ரீடைல் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது, ஜியோ இதுவரையில் 35000 கோடி ரூபாயை இதுவரையில் முதலீடு செய்து டிஜிட்டல் புரட்சிக்கு உதவியுள்ளது எனத் தெரிவித்தார்.
ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் கனடா நாட்டின் ப்ரூக்பீல்ட் அசர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி உடன் இணைந்து தமிழ்நாட்டின் உயர் தொழில்நுட்பம், அதிநவீன டேட்டா சென்டரை அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டர் அடுத்த வாரத்தில் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
இதேபோல் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளோம். இதற்காகத் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவ முடியும் எனவும் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications