டாடா குழுமத்தில் டாடா டிஜிட்டல் முக்கிய வர்த்தகப் பிரிவாக மாறுவது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவின் எதிர்காலமாக மாறிவருகிறது.
சமீபத்தில் கூட டாடா குழுமத்தின் அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் கீழ் இணைக்கும் பணியில் டாடா கிளிக் கடைசியாக இணைக்கப்பட்டது.
டாடா குழுமத்தின் டிஜிட்டல் ரீடைல் வர்த்தகப் பிரிவின் நுழைவு வாயிலாக இருப்பது டாடா குழுமத்தின் சூப்பர் ஆப் ஆக விளங்கும் டாடா நியூ. இந்த முக்கியமான டாடா நியூ வர்த்தகத்தை ஆரம்பம் முதல் நிர்வாகம் செய்துவரும் முகேஷ் பன்சால் தற்போது தனது நேரடி நிர்வாகப் பணியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரீடைல் சந்தை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் B2B வர்த்தகத்தில் இருந்து B2C பிரிவு வர்த்தகத்திற்கு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், டாடா குழுமம் இதற்கு முன்னோடியாக அனைத்து B2C வர்த்தகத்தையும் ஒரே தளத்தில் அளிக்க வேண்டும் என்ற முடிவுடன் டாடா நியூ என்ற சூப்பர் ஆப் உருவாக்கியது, இதன் தொடர்ச்சியாக அதானி குழுமமும் சூப்பர் ஆப் உருவாக்கி உள்ளது.
டாடா டிஜிட்டல்
இந்த முக்கியமான போட்டி நிறைந்த காலகட்டத்தில் டாடா டிஜிட்டல் அதாவது டாடா குழுமத்தின் டிஜிட்டல் ரீடைல் பிரிவின் தலைவராக இருக்கும் முகேஷ் பன்சால், டாடா நியூ செயலியின் தினசரி நிர்வாகப் பணியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் மட்ட அதிகாரிகள்
சமீபத்தில் டாடா டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறியது மட்டும் அல்லாமல் பல நிர்வாக மாற்றங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை தளமாக மிந்திரா நிறுவனத்தை நிறுவி, அதை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தி நாட்டின் முன்னணி ஆடை விற்பனை தளமாக மாறியவர் முகேஷ் பன்சால்.
முகேஷ் பன்சால்
பிளிப்கார்ட் நிறுவனம் மிந்திரா நிறுவனத்தைக் கைப்பற்றிய நிலையில், பல ஆண்டுகள் பிளிப்கார்ட் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருந்த முகேஷ் பன்சால் 2021 ஜூன் மாதம் டாடா டிஜிட்டல் நிறுவனத்தில் சேர்ந்தார்.
டாடா நியூ பிரிவு
தற்போது டாடா நியூ பிரிவின் நேரடி நிர்வாகப் பொறுப்பில் இருந்து வெளியேறும் முகேஷ் பன்சால், இனி வெறும் ஆலோசகர் பொறுப்பில் மட்டுமே இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிர்வாகம் மற்றும் பொறுப்பு மாற்றம் குறித்து டாடா குழுமத்தில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
பிரதிக் பால்
இந்த நிலையில் தற்போது டாடா டிஜிட்டல் நிறுவனத்தை மொத்தமாகத் தற்போது சிஇஓ-வாக இருக்கும் பிரதிக் பால் நிர்வாகம் செய்ய உள்ளார். இதற்கிடையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு முகேஷ் பன்சால் டாடா டிஜிட்டல் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்ட பிரதீக் மேத்தா மற்றும் ஷரத் புலுசு ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
புதிய ஸ்டார்ட்அப்
இதேபோல் முகேஷ் பன்சால் புதிதாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் முகேஷ் பன்சால் விரைவில் டாடா டிஜிட்டல், டாடா நியூ விட்டு மொத்தமாக வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications